» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெருமாள் கோவிலில் புரட்டாசி 2வது சனி சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்!

சனி 30, செப்டம்பர் 2023 12:04:06 PM (IST)



தூத்துக்குடி பெருமாள் கோவிலில்  புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு குருவாயூரப்பன் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் குடும்பத்தில் சகல பாவங்களும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் பெருமாள் கோவில்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமை வழிபாடு கோலாகலமாக நடந்தது. அதிகாலையில் கோ பூஜை மற்றும் விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. பெருமாள் குருவாயூரப்பன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆயிரக் கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு துளசி பிரசாதமாக வழங்கப்பட்டது.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory