» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நான் மாநில அரசியலுக்கு வருவது குறித்து கட்சி முடிவு செய்யும்: கனிமொழி எம்பி

வியாழன் 29, ஆகஸ்ட் 2024 11:47:10 AM (IST)



"நான் மாநில அரசியலுக்கு வருவது குறித்து கட்சியும், முதல்-அமைச்சரும் முடிவு செய்வார்கள்" என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி எ.ம்பி.யும், தி.மு.க., துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி, சென்னை மைலாப்பூரில் மாணவர்களுடன் நிகழ்ச்சியொன்றில் கலந்துரையாடினார். அப்போது அரசியல் நுழைவு குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு கனிமொழி பதில் அளித்தார். அதில், தனது தந்தை கருணாநிதி கைதின் போது காவல்துறையை நோக்கி சாதாரண கேள்வி எழுப்பியபோது, அதனையும் குற்றமாக எதிர்கொண்ட தருணத்தை நினைவு கூர்ந்தார்.

அந்த அசாதாரண தருணத்திலும் கலைஞர் ஒரு போராளியாக எதிர்கொண்டதையும், அதுவே தனது அரசியல் நுழைவு என்றும் கனிமொழி தெரிவித்தார். மேலும், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராவதும், தான் மாநில அரசியலுக்கு வருவது குறித்தும் கட்சியும், முதல்-அமைச்சரும் முடிவு செய்வார்கள் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory