» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதம் நீட்டிப்பு

வியாழன் 29, ஆகஸ்ட் 2024 5:02:52 PM (IST)



தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சார்பில் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தாம்பரம் - நாகர்கோவில், நாகர்கோவில் - தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த வாரந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு தாம்பரம் வரும் வாரந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்.06012), வரும் செப்டம்பர் 1, 8, 15, 22, 29, அக்டோபர் 6, 13, 20, 27, நவம்பர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை தோறும் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு அடுத்தநாள் காலை 3.45 மணிக்கு நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (06011), வரும் செப்டம்பர் 2, 9, 16, 23, 30, அக்டோபர் 7, 14, 21, 28, நவம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

V chidambaramAug 29, 2024 - 10:09:54 PM | Posted IP 172.7*****

Very good service

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory