» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணி இடைநீக்கம்!
வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 11:32:27 AM (IST)
நாகர்கோவிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவில் கோணத்தில் மத்திய அரசு பள்ளியான கேந்திர வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராமசந்திர சோனி (50) என்பவர் ஓவிய கலைப்பிரிவு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவி பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.
அதன்பேரில் பள்ளி நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இந்த விவகாரம் பற்றி தகவல் அறிந்த குழந்தைகள் நல அதிகாரிகள் இதுபற்றி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமசந்திர சோனியை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே ஆசிரியர் ராமசந்திர சோனி மீது துறை ரீதியான நடவடிக்கையாக அவரை பணி இடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.