» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.27.38 இலட்சம் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!

திங்கள் 2, செப்டம்பர் 2024 4:12:10 PM (IST)



கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 34 பயனாளிகளுக்கு ரூ.27.38 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 415 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். 

மேலும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைகள் மற்றும் நீர் நிலைகளில் உள்ள குப்பைகளை அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள் தூய்மைப்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர்  அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.25.90 இலட்சம் மதிப்பிலான செயற்கை அவயம், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட 9 பயனாளிகளுக்கு ரூ.84,150 மதிப்பில் சிறப்பு மடக்கு சக்கர நாற்காலிகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.43,832 மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், 3 பயனாளிகளுக்கு ரூ.19,652 மதிப்பிலான தேய்ப்பு பெட்டிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சேக் அப்துல் காதர், வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வி.எஸ்.காளீஸ்வரி (நாகர்கோவில்), செ.தமிழரசி (பத்மநாபபுரம்), ஆயத்தீர்வை உதவி ஆணையர் லொரைட்டா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாரதி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory