» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேகதாது அணை தமிழ்நாட்டுக்காகத்தான்: கர்நாடக துணை முதல்வர் சொல்கிறார்!

செவ்வாய் 3, செப்டம்பர் 2024 4:32:37 PM (IST)

சென்னை வந்துள்ள கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் அமைச்சர் உதயநிதி நேரில் சந்தித்தார்.

சென்னை வந்துள்ள கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தார். இரு மாநில அமைச்சர்களுக்கு இடையே நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சென்னை சேத்துப்பட்டில் இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை பார்வையிட்டு, செயல்பாடுகளை கேட்டறிந்தார். திடக்கழிவு மேலாண்மை குறித்தும் ஆய்வு செய்த அவர், பெங்களூருவில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவது தொடர்பாக சென்னையில் ஆய்வு செய்தார். 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மேகதாது அணை தமிழ்நாட்டுக்காக தான். மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவை விட அதிக பயன்பெறுவது தமிழ்நாடு தான். தற்போது போதிய அளவு மழை பெய்துள்ளதால் மேகதாது அணை குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு மாநிலத்திற்கும் வருண பகவான் உதவுவார்" என்று தெரிவித்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory