» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

செவ்வாய் 3, செப்டம்பர் 2024 5:09:49 PM (IST)



பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு  எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்தவர் காளிக்குமார்(33). சரக்கு வாகனத்தின் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இந்த சூழலில் காளிக்குமார் ஓட்டிச் சென்ற சரக்கு வாகனத்தை இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் காளிக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் படுகாயம் அடைந்த காளிக்குமார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காளிக்குமாரின் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி காளிக்குமார் உறவினர்கள் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. காயத்ரி பேச்சுவார்த்தை நடத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் போராட்டக்காரர்கள் பெண் டி.எஸ்.பி. காயத்ரி மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த போலீசார் டி.எஸ்.பி. காயத்ரியை அவர்களிடமிருந்து மீட்டனர்.

அங்கு பதற்றமாக சூழல் ஏற்பட்ட தொடர்ந்து, சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. கண்ணன் ஆய்வு செய்தார். பெண் டி.எஸ்.பி.யை தாக்கியதாக 4 பேரை பிடித்து போலீசார் விசாராணை நடத்தி வந்தனர். மேலும் மோதலில் ஈடுபட்டதாக மேலும் சிலரை கைது செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தாக்குதல் தொடர்பாக, 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory