» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவித் தொகை!
செவ்வாய் 3, செப்டம்பர் 2024 5:28:13 PM (IST)
நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சார்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளையாட்டுத் துறையில் சர்வதேச தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000 வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணைய தள முகவரி www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகின்றன.
தகுதிகள்: குறைந்தபட்சதகுதி சர்வதேச தேசிய அளவிலான போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்று இருத்தல் வேண்டும் (அல்லது) சர்வதேச தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பு
தகுதியான விளையாட்டுப் போட்டிகள்: மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
2024ம் வருடம் 31 ஆகஸ்ட் மாதம் 58 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் தமிழகத்தைச் சார்ந்தவராகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6,000-க்குள் இருத்தல் வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் அல்லது மாநிலல அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் இத்திட்டத்தின் கீழ் பெறத்தகுதியில்லை.
முதியோருக்கான (Veteran / Masters sports meet) விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதியில்லை. விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணைய தளமான www.sdat.tn.gov.in ல் மட்டுமே தங்களது சுய விவரம் மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இணைய தளத்தில் தங்களது பதிவேற்றத்தினை 30.09.2024 அன்று மாலை 6.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.