» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகர் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

புதன் 4, செப்டம்பர் 2024 5:51:44 PM (IST)

நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times). இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கோட் திரைப்படம் நாளை (செப். 5) திரையரங்குகளில் வெளியாவுள்ளது. தமிழகத்தில் 1100 திரைகளிலும் வடமாநிலங்களில் 1000 திரைகளிலும் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என கிட்டத்தட்ட 5000 திரைகளில் கோட் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், கோட் திரைப்படத்தின் 9 மணி காட்சிக்கு நாளை ஒரு நாள் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை 5 காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாள்களுக்கு கோட் படத்தின் சிறப்புக் காட்சிகளை திரையிட வேண்டும் என்று படக்குழு, தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில், நாளை ஒரு நாள் மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory