» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண் தொழில்முனைவோருக்கான “தொழிலி“ பயிற்சி: ஆட்சியர் துவக்கி வைத்தார்

வியாழன் 5, செப்டம்பர் 2024 3:22:12 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் தொழில்முனைவோருக்கான "தொழிலி" பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று (05.09.2024) தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் நான் முதல்வன் சார்பில் இரண்டு நாள் "தொழிலி" பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துவக்கி வைத்து தெரிவிக்கையில் "தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் திருநெல்வேலி மற்றும் கோவை மண்டலம், கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன் இணைந்து கன்னியாகுமரி மாவட்ட பெண் தொழில் முனைவோர் மற்றும் பெண் மாணவர்களுக்காக பிரத்யேகமாக "தொழிலி" என்ற குமரி புத்தாக்க பயிற்சி முகாம் இன்று முதல் நாளை (06.09.2024) வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் தொழில்முனைவோர்களுக்கு நிலையான தொழில் சூழலை ஏற்படுத்துவதற்கும், கல்லூரி மாணவிகளிடம் தொழில் திறன், ஆராய்ச்சி திறன், மற்றும் புதுத்தொழில் துவங்கும் ஆர்வம் மேம்படுவதற்கும், இந்த புத்தாக்க துவக்க முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

"தொழிலி” பயிற்சி முகாமின் முதன்மை நோக்கமானது, ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழலில் செல்ல தேவையான திறன்கள் மற்றும் அறிவை பெண்களுக்கு வழங்குவதாகும். இந்த பயிற்சி பெண் தொழில்முனைவோர்கள் மற்றும் மாணவிகள் இடையேயும் நம்பிக்கை மற்றும் நேர்மறையான மனநிலையை உருவாக்குகிறது. புத்தாக்க சிந்தனைகள் மற்றும் ஸ்டார்ட்ஆப் பற்றிய ஆழமான புரிதல் வளர உதவுகிறது. மேலும் பிராண்டிங், விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் பிற முக்கிய ஆதாரங்களைப் பற்றிய ஆழமான புரிதல் அளிக்க பயிற்சி உதவுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமான தொழில் முன்னெடுப்புகள் நடக்கவேண்டும் என்பது இந்த இரண்டு நாள் பயிற்சியின் நோக்கமாகும். அதில் அதிக அளவு பெண் தொழில் முனைவோர்கள் வரவேண்டும் என்பது இந்த பயிற்சியின் அளவுகோல் ஆகும்.புத்தொழில் துவங்க சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. இந்நிலையில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் தொழில் முனைவோர்களுக்கு இந்த பயிற்சி ஒரு சிறந்த வாய்ப்பாக அமையவுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட திறன் மேன்பாடு இணை இயக்குநர் லட்சுமிகாந்தன், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க திருநெல்வேலி மண்டல திட்ட மேலாளர் ராகுல், கோவை மண்டல திட்ட மேலாளர் காயத்ரி சிதம்பரம், ஓசூர் மாவட்ட திட்ட மேலாளர் சி.ஜிஜின் துரை, கோவை மண்டல இணை மேலாளர் ராஜசேகர், மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory