» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இதுதான் மத்திய பா.ஜ.க. அரசு தரமான கல்வி முறையா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

திங்கள் 9, செப்டம்பர் 2024 12:54:55 PM (IST)

தேசிய கல்வி கொள்கைக்கு அடிபணிய மறுத்ததற்காக சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தேசிய கல்வி கொள்கைக்கு அடிபணிய மறுத்ததற்காக சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது என்று மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி தர மறுப்பதை சுட்டிக்காட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: தேசிய கல்வி கொள்கைக்கு அடிபணிய மறுத்ததற்காக சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுப்பது, அதே நேரத்தில் இலக்குகளை நிறைவேற்றாதவர்களுக்குத் தாராளமாக வெகுமதி அளிப்பது - இதுதான் மத்திய பா.ஜ.க. அரசு தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்தும் முறையா? நம் தேசம் மற்றும் மக்களின் முடிவுக்கே இதை விட்டுவிடுகிறேன்!" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory