» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மிலாடி நபியை முன்னிட்டு செப். 17 பொது விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு!

திங்கள் 9, செப்டம்பர் 2024 5:24:56 PM (IST)

மிலாடி நபியை முன்னிட்டு செப்டம்பர் 17ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 16-ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுவதாக இருந்த நிலையில், அன்றைய தினம் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு ஏற்கெனவே அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், செப். 4-ஆம் தேதி எதிர்பார்க்கப்பட்ட பிறை தெரியாததால், செப்டம்பர் 17-ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசிடம் தலைமை காஜி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், தமிழக அரசு அலுவலகங்களுக்கு செப். 17ஆம் தேதி பொது விடுமுறை அளிப்பதாக தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் அரசாணையில் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory