» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்களைத்தேடி மருத்துவ திட்டத்திற்கு ஐ.நா. விருது : முதல்வ‌ர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

செவ்வாய் 8, அக்டோபர் 2024 11:01:08 AM (IST)

மக்களைத்தேடி மருத்துவ திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு விருது வழங்கி உள்ளது. 

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியத் துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக நமது திராவிட மாடல் அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் தேடி வந்து இருக்கிறது. 

ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரையில், இந்த திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர். ஒவ்வொருவரது இல்லத்துக்கும் சென்று மருத்துவச் சேவைகளை வழங்கும் நமது திட்டம், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் அடையாளம்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ம் ஆண்டிற்கான விருது (ஐக்கிய நாடுகளின் நோய் தொற்றா பணிக்குழு விருது). மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தி, 

கண்காணித்து மேம்படுத்தி வரும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாசுப்பிரமணியத்திற்கும், அவருக்கு துணை நிற்கும் துறைச் செயலாளர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்த திட்டம் இன்னும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு மக்களுக்கு பயனளிப்பதைத் தொடர்ந்து உறுதிசெய்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory