» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

வியாழன் 16, ஜனவரி 2025 11:11:44 AM (IST)


உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறுகிறது. பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் துவங்கிய ஜல்லிக்கட்டு, மாட்டுப் பொங்கல் தினத்தில் பாலமேட்டில் நடைபெற்றது. அந்த வரிசையில், உலகளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கியது. 

போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்கின்றன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை காண நேற்று இரவு முதல் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory