» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை
வங்கி, செல்போன், கல்விச் சேவைக்கு ஆதார் கட்டாயம் இல்லை: உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
புதன் 26, செப்டம்பர் 2018 12:08:51 PM (IST)
வங்கி, செல்போன், கல்விக் சேவைக்கு ஆதார் கட்டாயமில்லை; எந்தக் காரணத்தைக் கொண்டும் தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்ணை பெறக் கூடாது என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

ஆதார் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் :
தனிநபர் கண்ணியம் காக்கப்பட ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் கட்டாயமாக்கக் கூடாது. நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது. ஆதார் அடையாள அட்டைக்கும் பிற அடையாள அட்டைகளுக்கும் வித்தியாசம் உள்ளது. ஆதார் அட்டையை போலியாக உருவாக்க முடியாது. ஆதார் என்பது மற்ற அடையாள ஆவணங்களைப் போல அல்ல. குறைந்த, அத்தியவாசியத் தகவல்கள் மட்டுமே ஆதாருக்காகப் பெறப்படுகிறது.
ஆதார் சிறந்தது என்பதை விட தனித்துவமானது என்பதே நல்லது. தனி நபர் சுதந்திரத்தை ஆதார் திட்டமும், அட்டையும் பாதிக்கிறது என்பதே பிரச்னையாக உள்ளது. ஆதார் இல்லை என்பதற்காக தனிநபரின் உரிமைகள் பறிக்கப்படக் கூடாது.வங்கி மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கும், செல்போன் சேவைக்கும் ஆதார் எண்ணைக் கேட்கக் கூடாது. ஆதார் இல்லை எனக் கூறி குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்டவை மறுக்கப்படக் கூடாது. பான் எண் பெற ஆதார் எண் கட்டாயம் என்பது சரியே. எந்தக் காரணத்தைக் கொண்டும் தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்ணை பெறக் கூடாது, ஆதார் எண்ணைக் கையாளக் கூடாது என்று மிக பரபரப்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று அளித்துள்ளது.
மக்கள் கருத்து
கணேசன்Sep 26, 2018 - 04:49:54 PM | Posted IP 172.6*****
வங்கி சேவைக்கு ஆதார் வேண்டாம், பான் கார்டு வாங்க ஆதார் வேண்டும், வங்கி சேவைக்கு பான் கார்டு வேண்டும் தீர்ப்பு சரியாக புரிகிறதா? மக்களே
கணேசன்Sep 26, 2018 - 04:49:53 PM | Posted IP 162.1*****
வங்கி சேவைக்கு ஆதார் வேண்டாம், பான் கார்டு வாங்க ஆதார் வேண்டும், வங்கி சேவைக்கு பான் கார்டு வேண்டும் தீர்ப்பு சரியாக புரிகிறதா? மக்களே
ஒருவன்Sep 26, 2018 - 12:29:31 PM | Posted IP 141.1*****
நீதிமன்றம் அப்படி இப்படி சொல்லும் , ஆனால் வங்கிக்கு போனால் இப்படி அப்படி சொல்லும்... 2000 ரூவா நோட்டு மாற்ற வரிசையா நிற்க சொல்லும்போது ஆதார் கேட்டது மிக கொடூரமானது , அந்த ஆதார் xerox எல்லாம் இன்று குப்பையில் போனது... நாட்டில் மக்களை முட்டாளாக்குவது உயர்நீதிமன்றமும் , அரசியல்வாதிகளும் ..நாடு முட்டாள் கைகளில் இருக்கிறது
மேலும் தொடரும் செய்திகள்

ராஜாNov 10, 1538 - 09:30:00 PM | Posted IP 141.1*****