» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் குருபெயர்ச்சி பலன்கள்

வெள்ளி 5, அக்டோபர் 2018 7:37:13 PM (IST)

குருபகவான் விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18ம் நாள் 4.10.2018 வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதன்படி சுமார் 1 வருடங்களுக்கான 12 ராசிக்காரர்களுக்கும் உரிய பலன்கள் இதோ...

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) 

* பதவி உயர்வு, சம்பள உயர்வு * புதிய வீடு வாகன யோகம்

அழகான தோற்றமும், வாக்கு பலிதமும் கொ4.10.2018 அன்று குரு பகவான் உங்களது ராசிக்கு 8ம் இடத்தில் ச்ஞ்சாரம் செய்கிறார். குருவின் பார்வையானது உங்களது ராசிக்கு 2.4.12ம் இடங்களை சிரப்புச் செய்யவுள்ளது. இதுவரை இருந்த உடல் நலக் கோளாறுகள் சீராகும். மருத்துவச் செலவுகள் குறையும். தன வரவு தைரியம் கூட்டும். பலவழிகளில் வருமான வாய்ப்புகள் கூடும்.

தொழில் மற்றும் வியாபாரம் செ ய்வோருக்கு :

அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த மறை முகப் பிரச்சினை கள் தீரும். மதிப்பும், மரியாதையும், சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடை க்கும். ஒரு சிலருக்கு பதவியில் இருந்து கொண்டே , மேல்படிப்பு படிக்கும் யோகமும் உண்டா கும். புதிய தொழில் வாய்ப்புகள் அமையும். சுய தொழில் சிறக்கும். சிறு தொழில் லாபம் கூட்டும். பழைய வாகனங்களை மாற்றி விட்டு, புதிய வானங்களும் வாங்குவிர்கள் .

குடும்ப நலன் முன்னேற்றம் :

குடும்ப நலன் சீராகும். சுபச் செய்திகள் வந்து கொண்டே இருக்கும். ஒரு மகனுக் கோ அல்ல து ஒரு மகளுக் கோ திருமணம் பே சி முடிக்க லாம். தங்கள் பேச் சுக்கு தனி மரியாதை கூடும். உறவுகள் பலப்ப டும். சகோத ர வழியில் உதவிகள் அமையும். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள் . தொழில் மாற்ற ம் தொடர்பா க தங்கள் ஆலோசனைகள் வெற்றி தரும். புதிய வீடு, கட்டிடங்கள் கட்டுவீர்கள் .
பெண்களுக்கு:

புதிய ஆடை , ஆபரணச் சேர்க்கை அமையும் நீண்ட நாட்களாக பாதியில் கட்டி முடிக்கப்படாமல் இருந்த வீடு, வேலைகள் புதிய பொலிவுடன் நிறைபெற்று, சொந்த வீட்டில் குடியேறுவீர்கள் . யாருக்கும் ஜாமீன் ஏற்க வேண்டாம்.


ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகினி : மிருகசிரிசம் 1, 2 பாதங்கள்)

* மனதைரியம் கூடும் * தனவரவு சேரும்

சகலகலா வல்ல வர்க ளான உங்களது ராசிக்கு 1.04.2018 முதல் குரு பகவான் 7ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் உங்களது ராசிக்கு 1.3.11ம் இடங்கள் கூடுதல் வலிமை அடைந் து நற்ப லன் கூடவுள்ளது. இதனால் நல்ல யோகம் வடும். குடும்ப நலன் சீராகும். நீண்ட நாட்க ளாக தடைப்ப ட்டிருந்த சுப காரிய முயற்சிகள் கை கூடும். அரசு வழியிலே உதவிகளும் பெ றலாம். ஆன்மிக சுற்றுலா வாய்ப்புகளும், அமையும். தொழிலில் இதுவரை இருந்த போ ட்டி, பொ றாமை குறையும். அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை .

தொழில் மற்றும் வியாபாரம் செய்வோருக்கு :

அரசாங்க வேலை வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி அமை யலாம். வருமான வாய்ப்புகள் கூடும். மறை முக எதிர்ப புகள் குறையும் கூட்டுத் தொழிலில் குழப்ப ங்கள் குறையும். கொடுக்கல், வாங்கல், பணப்பரிமாற்ற ம் தங் குதடையின்றி அமையும். வேலை , வியாபார நிமித்தமாக இதுவரை பிரிந்திருந்தவர்கள் . குடும்ப த்தினருடன் சே ர்ந்து வாழும் சூழ்நிலை உருவாகும். மனதில் திடமும், தன்ன ம்பிக்கையும் கூடும். யாருக்கும் வாக்குக் கொடுக்கவோ , ஜாமீன் ஏற்கவோ வேண்டா ம்.

குடும்ப நலன் முன்னேற்றம் :

குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பொருளாதார முன்னேற்றறமும் கூடும். சுப காரியங்களக் சுமூகமாக நடைபெறும். பெற்றோர் வழியில் மருத்துவச் செலவுகள் கட்டுக்குள் வரும். மனச் சோர்வு அடைய வேண்டாம். பிள்ளைகளால் நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். சகோதார வழி உறவுகள் உதவிகள் கூட்டும். புதிய வண்டி வாகன யோகமும் அமையும். வெ ளிநாட்டுப் பயனங்கள் ஒரு சிலருக்கு அமையலாம்.

பெண்களுக்கு:

காரியத் தடை அகலும். திடீர் திருமண வாய்ப்புகள் நலம் தரும். சொந்த பந்தங்களால் நன்மைகள் கூடும். புதிய ஆடை , ஆபரணச் சேர்க்கையும் உண்டா கும். வயிறு தொடர்பா ன உபாதை கள் ஒரு சிலருக்கு ஏற்படலாம்.


மிதுனம் மிருகசீரிடம் 3, 4 பாதங்கள், திருவாதிரை , புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

* புதிய தொழில் அமையும் * தன வரவு கூடும்

புத்திசாலித்தனம் நிறைந்த உங்களது ராசிக்கு 4.10.2018 முதல் ஆறாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால், தனவரவு தாராளமாகும். சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். அலைச்சல் கூடினாலும். ஆதாயமும் கூடும். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவீர்கள் . ஒரு சிலருக்கு இடமாற்றம், பதவி மாற்றம் உயர்வு தரும். கோவில் திருப்பணிகளும் செய்து முடிப்பீர்கள். பழைய கடன்கள் அடைபடும். வாழ்க்கைத் தரம் உயரும். நட்பு வலைவிரியும். யாருக்கும் ஜாமீன் ஏற்கவேண்டாம். உடல் நலன் பேணவும்.

தொழில் மற்றும் வியாபாரம் செய்வோருக்கு :

புதிய நல்ல வேலை வாய்ப்புகள் தானாகத் தேடி வரும். வாய்ப்புகளை நழுவ விட்டு விடாதீர்கள் . ஏஜென்சி மற்றும் கமிசன் கூடுதல் லாபம் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வரவேண்டிய நிலுவைப் பணமும் வந்து சேரும். பணி நிரந்தரம் நிம்மதி தரும். அலுவலக நண்பர்களால் அன்பும், ஆதாயமும் கூடம். தூரதேச தகவர்களும் சென்றுவர வாய்ப்புகளும் அமையலாம். புதிய தொழில் புத்துணர்வு கூட்டும். சிறிய தொழில்கள் சிறப்பான லாபம் தரும்.

குடும்ப நலன் முன்னேற்றம் :

குடும்ப முன்னேற்றம் குதுகலம் கூட்டும் கூட்டு குடும்ப ங்களால் பற்பல நன்மைகள் ஏற்படும். புதிய இடம், சொத்து வாங்கும் முயற்சிகள் கைகூடும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். சகோதர உறவுகள் தக்க சமயத்தில் கைகூடும் மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி எல்லா வகைகளிலும் கூடுல் நன்மைகளை தரும்.

பெண்களுக்கு:

புதிய ஆடை , ஆபரணச் சேரக்கை அமையும். மகளிர் சுய உதவி குழுக்களால் மேன்மை பெறலாம். தன வரவு கூடும். பாக்கிகள் வசூலாகும். செல்லப் பிராணிகள் வளர்ப்பால் மன நிம்மதி கூடும். வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


கடகம் (புனர்பூசம் 4 ம் பாசதம், பூசம், ஆயில்யம்)

* பயணங்கள் பயன்தரும் * மரியாதை கூடும்
 
தாய்ப்பாசம் மிகுந்த உங்கள் ராசிக்கு 4.10.2018 முதல் குரு பகவான் 5ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால், குருபகவானின் பார்வையானது உங்களது ராசிக்கு 1, 9, 11 ம் இடங்களில் பதிகிறது. பூர்வ புண்ணிய ஸ்தா னமான 5ம் இடத்தில் குரு பகவானின் சஞ்சாரத்தினால், குடும்ப உறவுகள் சீராகும். சுப காரியங்கள் நல்ல படியாக நடக்கும் புதிய வண்டி, வாகனம் வாங்கலா. பழைய கடன்கள் அடை படும். புதிய கோ வில் திருப்ப ணிகளில் ஈடுபடுவீர்கள் . அரசு வேலை வாயப்பு அமையும்.

தொழில் மற்றும் வியாபாரம் செய்வோருக்கு :

புதிய தொழில் மற்றும் வியாபார வாய்ப்புக்ளில் நல்ல சந்திப்புகள் பயன் கூட்டும். நண்பர்களால் தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். மனமகிழ்ச்சி கூடும். அலுவகப் பணிகளில் ஆர்வம் கூடும். சொந்த பந்தங்களால் உதவிகள் பெ றலாம். பழைய வழக்குகள் சாதகமாகும். வெ ளிநாட்டு வேலை வாய்ப்புகளும் ஒரு சிலருக்கு அமை யலாம். உடன் பணிபுரிவோரிடம் கூடுதல் எச்சரிக்கையுடன் பழகவும். கடல் சார்ந்த பொருட்களால் லாபம் கூடும். ஏற்றுமதி, இறக்குமதியாலும் பயன் பல பெறலாம்.

குடும்ப நலன் முன்னே ற்றம் :

குடும்ப நலன் கூடும். கணவன் – மனைவி உறவு பலப்படும். பிள்ளைகளினால் மனமகிழ்ச்சி கூடும். பழைய சொந்தங்கள் மீண்டும் ஒன்று கூடுவர். புதிய ஆடை , ஆபரணச் சேர்க்கையும் அமையும். மூத்த சகோதரர், சகோதரி வழியில் உதவிகள் அமையும். நட்பு வழியில் கூடுல் கவனம் தேவை . புதிய சொ த்து சேர்க்கையும் ஒரு சிலருக்கு அமையும். வெ ளிமாநில வேலை வாயப்புகள் அமையும்.

பெண்களுக்கு:

சுபகாரியங்கள் நடக்கும். குழந்தைப்பேறு உண்டாகும். மனதில் திடமும். நம்பிக்கையும் கூடும். பதவி மாற்றம் நல்ல இடமாற்றம் அமையலாம். அழகு நிலையம் நடத்துவோர் கூடுதல் லாபம் பெறலாம்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)


* அலைச்ச லும் ஆதாயமும் கூடும் * பயண்ங்கள் பயன் தரும்

மன தைரியமும், நல்ல தோற்றமும் உடைய சிம்ம ராசி அன்பர்களே !

மக்கள் செல்வாக்கும் பெற்ற உங்கள் ராசிக்கு 4.10.2018 முதல் குருபகவான் 4ம் வீட்டில் சஞ்சரிப்பதால், குருவின் பார்வையானது உங்களது ராசிக்கு 8.10.2018 இடங்களை பார்த்து வலிமை கூட்டவுள்ளது. பழைய சொ த்து கிடைக்கும். புதிய சொத்துகளும் வாங்கலாம்.ரியல் எஸ்டேட் துறையினர் மீண்டும் சுறு சுறுப்பு விறு விறுப்புடன் செயல்படலாம். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். திருமணம் கை கூடும். தொழில் லாபம் கூடும்.

தொழில் மற்றும் வியாபாரம் செய்வோருக்கு :

சுய தொழில் லாபம் தரும். கூட்டுத்தொழிலில் குழப்பங்கள் குறையும். கொடுக்கல் வாங்கல் சீராகும். வங்கிப்பரிமாற்றம். ஏ.டி.எம் கார்டு, காசோலை போன்ற வகையில் கூடுதல் கவனமுடன் செயல்படவும்.

குடும்ப நலன் முன்னேற்றம் :

குடும்ப த்தில் மகிழ்ச்சி கூடும். உறவு, நட்பு வகையில் உதவிகள் அமையும். சொ த்து பிரச்சினை சுமூக தீர்வும், தங்களுக்கு லாபமும் தரும். நீண்டகால திருமணத் தடை அகலும். புத்திர பாக்கியமும் நல்ல படியாக கிடை க்கும். வீட்டிலிருந்தே சிறு தொழில், குடிசை த் தொழில் செய் வோர் கூடுதல் லாபம் பெ றலாம். நட்பு வழியில் கூடுதல் கவனம் தேவை .

பெண்களுக்கு:

புதிய வீடு, வண்டி, வாகன யோகமும் கூடும். புதிய வீட்டிற்கு குடியேறலாம். திருமணம் கைகூடும். புத்திரப்பேறு அமையும், பிரிந்தவர்கள் பிரியமுடன் ஒன்றுசேருவர், காவல்துறை பணி வாய்ப்புகளும் ஒருசிலருக்கு அமையும் பணியில் பாராட்டு, புகழ் கூடும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள் அஸ்தம், சித்திரை 1, 2 ம் பாதங்கள்)


* சுப காரியங்கள் நடக்கும் * சொத்து, சுகம் சேரும்

சுய கட்டுப்பாட்டோடு சுறுசுறுப்புடன் செயல்படும் கன்னி ராசி அன்பர்களே !

பேச்சு, புலமையில் தேர்ச்சி பெற்ற உங்கள் ராசிக்கு 4.10.2018 முதல் 3ம் வீட்டில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால், குருவின் பார்வையானது உங்களது ராசிக்கு 7, 9, 11ம் இடங்களை வலிமை யடை யச்செய்யும். லாபஸ்தனம், களத்திரஸ்தானம், பாக்யஸ்தா னத்தை குரு பார்ப்பதால், நல்ல பல நன்மைகள் தொடர் அலையாக வந்துகொண்டே இருக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பங்குச்சந்தை லாபம் தரும். தனலாபம் கூடும்.

தொழில் மற்றும் வியாபாரம் செய்வோருக்கு :

தொழிலில் நல்ல பங்குதாரர்கள் தானாக வந்து சேருவார்கள். நல்ல பணியாட்களும் கிடைப்பார்கள் , பொறுப்பாகவும் பணி செய்வார்கள் . நட்பு வலை , வட்ட ம் விரியும். உதவிகள் தே டிவரும். பெற்றோர், பெரியோர், மகான்க ளின் ஆசீர்வாத மும் கிடை க்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறவும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். உடல் நலத்தில் கூடுதல் அக்கரை எடுத்துக் கொள்ளவும்.

குடும்ப நலன் முன்னேற்றம் :

கூட்டுக் குடும்பங்களில் மகிழ்ச்சி கூடும். குலதெய்வம் கோவிலுக்கு எல்லோரும் சேர்ந்து சென்று வருவீர்கள் . எதிர்பாராத லாபங்கள் சொத்து வகையில் வந்து சேரும். குழந்தைகள் வளர்ப்பில் கூடுதல் கவனம் தேவை . மனக்குழப்பங்கள் குறையும். குடிசைத்தொழிலில் லாபம் மற்றும். சேமிப்பு கூடும்.

பெண்களுக்கு:

அலுவலகத்தில் நல்ல புகழ், பாராட்டு பெ றலாம். பழைய கடன்கள் அடைபடும். வண்டி, வாகனம் வாங்கலாம். முன் கோபம் குறைக்கவும்.


துலாம் (சித்திரை 3,4 –ம் பாதங்கள் சுவாதி, விசாகம், 1,2,3 பாதங்கள்)


*பதவி உயர்வு சம்பள உயர்வு கூடும் *வழக்குகள் சாதகமாகும்.

நேர்மையும், பொறுமையும் மிகுந்த துலாம் ராசி அன்பர்களே !

ஆற்றலும் பாசமிகு உடைய உங்களுக்கு 4.10.2018 அன்று குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். இதனால் உங்களது ராசிக்கு 6,8,10–ம் இடங்களை குருபகவான் வலிமையடைச் செய்வார். ஜோதிட சாஸ்திரப்படி ராசிக்கு இரண்டாம் இடத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்வது நல்லது. இதனால் தனவரவு, சுபகாரியங்களில் வெற்றி பெறுதல். குழந்தை பாக்கியம், கல்வி வளம் சிறத்தல் என்று எல்லா வகையிலும் பயன்பெறலாம். பதவி உயர்வு , சம்பள உயர்வும் அமையும் மனமகிழ்ச்சி கூடும்.

தொழில் மற்றும் வியாபாரம் செய்வோருக்கு:

நல்ல புதிய வேலை கிடைக்கப் பெறுவீர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் தனி மரியாதை , செல்வா க்கு கூடும் மறை முக எதிர்ப்புகள் அகலும் தூரதேசப் பயணங்களும் பயன்தரும். வேலை பார்க்கும் இடத்தில் இதுவரை இருந்த தேவையில்லா த நெருக்கடிகள் மாறும். வியாபார லாபம் கூடும். வாடிக்கை யாளர்களின் அன்பும், ஆதரவும் பெருகும் தொடர்ச்சியான முன்னே ற்றம் காணலாம். புதிய வீடு, மனை , சொத்து வாங்கும் யோகமும் அமையும்.

குடும்ப நலன் முன்னேற்றம் :

புதுவித முயற்சிகள் லாபம் தரும். கூட்டுக் குடும்ப ங்களில் ஒற்றுமை கூடும். நட்பு வட்டா ரம் நன்மை தரும். கணவன் – மனை வி உறவு, ஒற்றுமை கூடும். அரசு வழி அனுகூலம், வேலை வாய்ப் புகள் கை கூடும். வீட்டிற்கு வேண் டிய அனை த்து விதமான வசதி வாய்ப் புகளும் அமையும். பிள்ளைகள் வழியில் மனமகிழ்ச்சியான சூழல் உருவாகும். சுபகாரியங்கள் நடைபெறும். பழை ய பாக்கிகள் வசூலாகும். வங்கிச் சே மிப்பும் கூடும்.

பெண்களுக்கு:

விருந்து, விழா என்று சென்று வருவீர்கள் விரும்பிய இடமாற்றம் அமையும். சொந்த பந்தங்கள் நெருக்கம் கூடும். பிரிந்தவர்கள் பிரியமுடன் ஒன்று சேருவர். பிள்ளைகளுக்கு உயர்கல்வி, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கைகூடும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கலாம்.


விருச்சிகம் விருச்சிகம்: விசாகம் 4ம் பாதம் அனுசம், கேட்டை)


* சுப காரியங்கள் நடக்கும் *புதிய வீடு வாகனம் வாங்கலாம்.

உண்மையும் நேர்மையும் தர்ம சிந்தனையும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே !

பல கலைக ளில் தே ர்ச்சி பெற்ற உங்கள் ராசிக்கு 04.10.2018 அன்று உங்கள் ராசியிலேயே சஞ்சா ரம் செய் கிறார். மேலும் உங்களது ராசிக்கு 5,7,9–ம் இடங்களை பார்வையிட்டு வலிமை அடையச் செய்வார். புத்திர ஸ்தானம் களத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானங்களை குருபகவான் பார்ப்பது பல வகைகளில் நன்மை தரும் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி தரும். வங்கிப் பணியாளர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். பத்திரிகை, மீடியா துறையினர் வளர்ச்சி காணலாம்.

தொழில் மற்றும் வியாபாரம் செய்வோருக்கு :

செய்தொழில் சீரான லாபம் கிடைக்கும். தங்களது புத்தி கூர்மையால் பல காரியங்களை சாதிப்பீர்கள். அலுவலகம், தொழிற்சாலைகள் நடத்திட புதிய இடம், சொத்து வாங்கலாம். அரிசி நவதானிய வணிகர்கள் வளம் கூடும். கூட்டுத் தொழில் சிறக்கும் பணப்பரிமாற்றம் ஏ.டி.எம்.கார்டு பயன்பாடு போன்றவற்றில் கூடுதல் விழிப்புடன் செய்யவும். விரும்பிய இடமாற்றம் துறை மாற்றம் அமையும் சக ஊழியர்களால் உதவிகள் கூடும். முன்கோபம் தவிர்க்கவும்.

குடும்ப நலன் முன்னேற்றம் :

பழைய சொத்துகள் நல்ல விலை போகும். புதிய சொத்துகளும் விரும்பிய படி வாங்கலாம். குடும்ப த்துடன் வெ ளிமாநிலம், வெ ளிநாட்டுப்பயணங்களும் ஒரு சிலருக்கு அமையும். பலவழிகளில் பணவரவு கூடும். சொ ந்த பந்தங்களால் ஒரு சிலருக்கு கடன்கள் ஏற்படலாம். வண்டி வாகனங்களில் மிகுந்த கவனமாக பயனிக்கவும். புதிய திட்ட ங்களில் கூடுதல் பொ றுமையும் நிதானமும் தேவை . பழை ய பாக்கிகள் வசூலாகும். நல்ல பெயர் பதவி கிடைக்கும் . சிறுதொழில் , சுயதொழில் செய்வோர் கூடுதல் லாபம் பெறலாம். முன்கோபம் தவிர்க்கவும். விருந்து , விழா என்று சென்று வருவீர்கள். சொத்து சுகம் கூடும்.

பெண்களுக்கு:

நல்ல பெயர் பதவி கிடைக்கும், சிறு தொழில் சுப தொழில் செய்வோர் கூடுதல் லாபம் பெறலாம். முன்கோபம் தவிர்க்கவும். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். சொத்து, சுகம் கூடும்.


தனுசு (மூலம், பூராடம் உத்திராடம் 1ம் பாதம்)


* நட்பு நலம் தரும் * உயர்கல்வி அமையும்

நட் பின் குணம் நிறை ந்த தனுசு ராசி அன்பர்களே!

நட்பின் குணம் நிறைந்த தனுசு ராசி அன்பர்களே சுறுசுறுப்பும் தியாக உள்ளமும் கொண்ட உங்கள் ராசிக்கு 04.10.2018 அன்று 12ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் குரு பகவானின் பார்வையானது, உங்களது ராசிக்கு 4, 6, 8 ம் இடங்களை வலிமை அடையச் செய்யும். இதனால் சுப காரியச் செலவுகள் கூடும். குடும்ப நலம் ஒற்றுமை கூடும். வேலையில் இடமாற்றம், துறை மாற்றம், ஊர் மாற்றம் அமையும். பற்பல ஆன்மீக காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். அலைச்சலும் கூடும். ஆதாயமும் கூடும். வெளிநாடு சென்று வரும் யோகமும் அமையும்.

தொழில் மற்றும் வியாபாரம் செய்வோருக்கு :

புதிய தொழில் மாற்றம், வணிக லாபம் கூடும் பயணங்கள் பயன் தரும்.கூட்டுத் தொழிலில் கூடுதல் கவனம் தேவை . அலுவலகத்தில் வேலை ப்பளுகூடும். இதனால் மன அழுத்தம், மனச்சுமை ஏற்படலாம். வருமானவாய்ப்புகள் கூடும் சிறுதொழில், குடிசைத் தொழில் நல்ல லாபம் தரும். உடல்நலன் நல்லபடியாக குணமாகும். மருத்துவச் செலவுகள் கட்டுக்குள் வரும். பழைய வழக்குகள் சாதகமாகும். உயர் அதிகாரிகள் ஆலோசனைகளை ஏற்று செயல்படவும்.

குடும்ப நலன் முன்னேற்றம் :

சகோதர சகோதரிகள் ஒற்றுமை கூடும். புதிய சொத்து வாங்கும் முயற்சிகள் கைகூடும். ஊர் மாற்றம், இடமாற்றம் பயன்கூட்டும். ஒரு சிலர் பழை ய வீட்டிலிருந்து புதிய வீட்டிற்கு குடி செல்வீர்கள். பிள்ளைக ள் வழியில் மனகசப்பு குறையும். பிள்ளைக ளுக்கு நல்ல வேலை வாய்ப்புகளும் அமையும். அரசு வழி உதவிகளும் பெறலாம். உடல் நலனில் கூடுதல் அக்கறை காட்டவும். மனமகிழ்ச்சி கூடும்.

பெண்களுக்கு:

புதிய ஆடை , ஆபரணங்கள் வாங்கலாம். சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கூடும். அரசு விருதுகளும் ஒரு சிலருக்கு கிடைக்கலாம். புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள். கேட்டரிங் செய்வோர் புதிய பெரிய ஆடர்கள் பெறலாம். நட்பில் கூடுதல் கவனம் தேவை .


மகரம் (உத்திராடம் 2, 3,4 ம் பாதங்கள் திரு வோணம் அவிட்டம் 1, 2 ம் பாதம்)
* பாராட்டு பெருமை கூடும் *தன வரவு கூடும்

நல்ல பேச்சுத்திறனும், அறிவார்ந்த செயல் திறனும் உடைய மகரராசி அன்பர்களே !

மனப்பக்குவத்துடன் தெய்வ வழிபாடும் கூடிய உங்கள் ராசிக்கு 4.10.2018 அன்று 11ம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் உங்களது ராசிக்கு 3,5,7 ம் இடங்கள் வலிமையடையும். "இனி எல்லாம் சுகமே" என்று தான் சொல்ல வேண்டும். நல்லவை நடக்கும் அல்லவை அலறி ஓடிவிடும் அதிகாரப் பொறுப்புகள் வந்து சேரும் பெரிய இடத்து ஆதரவு கூடும். வங்கிச் சேமிப்பும் வளமாகும். உறவுகள் பலப்படும் உடல் நலம் சீராகும். உயர்கல்வி யோக மும் அமையும்.

தொழில் மற்றும் வியாபாரம் செய்வோருக்கு :

அலுவலக பிரச்சினைகள் சுமூகமான தீர்வு தரும். அரசு வழி அனுகூலம் பெறலாம். மருத்துவச் செலவுகள் குறையும். உங்களுக்கு உதவ பலரும் தேடி வருவார்கள். நல்ல பணியாட்கள் அமைவார்கள். உயர்ப தவி, பட்டம் விருதுகள் கிடைக்கப்பெ றுவீர்கள். வியாபார லாபம் கூடும். உணவுப்பொருள் கடல் சார்ந்த பொருட்களால் தனலாபம் கூடும். நல்ல பங்குதாரர்கள் அமைவார்கள். புதிய வீடு, சொத்து, கட்டிடங்கள் வாங்குவீர்கள் உடல் நலத்தில் மட்டும் கூடுதல் கவனம் செ லுத்தவும்.

குடும்ப நலன் முன்னேற்றம் :

குடும்ப நலன் குதூகலமாகும். உறவு நட்பு வட்டாரம் பயன்தரும். சுபகாரிய முயற்சிகள் கை கூடும் பழைய கடன்கள் அடைபடும். பழை ய சொ த்துகளை மீட்கலாம். ஆன்மீகப் பணிகளில் நாட்ட ம் கூடும். சகோ தர உறவுகள் சுமூகமாகும். பொருளாதார வசதி மேம்படும். விருந்து விழா என்று சென்று வருவீர்கள் தூரதேசம் பயண வாய்ப்புகளும் அமையும்.

பெண்களுக்கு:

அலுவலக மேன்மை கூடும். ஏஜெ ன்சி துறையினரை ஏற்றம் காணலாம். சிறுதொழில், கைத் தொழில் செய்வோர் கடன் சுமை குறையும். புதிய ஆடை , ஆபரணச் சேர்க்கை யோகமும் உள்ளது. பெற்றோர் வழியில் உதவிகள் கிடைக்கும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.


கும்பம் (அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் சதயம், பூரட்டா தி 1, 2,3 பாதங்கள்)

* வழக்குகள் சாதகமாகும். * புதிய சொத்துக்கள் சேரும்.

செல்வாக்கும் சொல்வாக்கும் பெற்ற கும்பராசி அன்பர்களே !

நன்னடத்தை , கடின உழைப்பா ளிகளான உங்கள் ராசிக்கு 4.10.2018 அன்று 10–ம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் உங்களது ராசிக்கு 2,4, 6ம் இடங்களான குருபகவான் பார்த்து வலிமை அடையச் செய்வார். பழைய கடன்கள் அடைபடும். பாக்கிகள் வசூலாகும். புதிய சந்திப்புகள் லாபம் தரும். உடல் நலன் சீராகும். மருத்துவச் செலவுகள் கட்டுக்குள் வரும். உணவில் குளிர்ச்சியைக்குறைத்துக் கொள்ளவும். இடமாற்றம் பதவி உயர்வு, யோகம் தரும்.

தொழில் மற்றும் வியாபாரம் செய்வோருக்கு :

பலவழிகளில் வருமானம் கூடும் மறை முக எதிர்ப்புகள் குறையும். இருந்தா லும் செல் போன் பே ச்சுகளில் கூடுதல் எச்சரிக்கை தேவை. தொடர்ந்து வரும் மிஸ்டு அழைப்புகளால் எரிச்சல் படவே ண்டா ம். தேவையற்ற அழைப்புகளை தவிர்த்து விடுங்கள் . புதிய வீடு வாகனம் வாங்குவீர்கள் பணிச்சுமை கூடும் அதனால் மன உளைச்சலும் கூடும். உடன் பணியாற்றும் ஒரு சிலரின் வேண்டாத வேலைகளால் ஊர்மாற்றம் ஏற்படலாம். உணவில் உப்பை குறைத்துக் கொள்ளவும்.

குடும்ப நலன் முன்னேற்றம் :

மன நிம்ம தி சீராகும். பிள்ளைக ள் வளர்ச்சி பெருமை காட்டும். ஆன்மீகச் சுற்றுலா தொடரும். திருப்பணி வேலைக ளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். பெற்றோ ர் உடல் நலன் மேம்ப டும். மருத்துவச் செலவுகள் குறையும் மகளிர் முன்னேற்றம் கூடும். அலுவலகப் பிரச்சினைகளில் யாரிடமும் வாக்குவாதம் செய்யவேண்டாம்.

பெண்களுக்கு:

உறவுகள் பலப்படும் மின்சா ரம் மற் றும் நெருப்பு போன்றவற்றில் கவனமுடன் செ யல்படவும். வண்டி, வாகன யோக மும் உள்ள து. உயர்கல்வி பட்ட ம் விருதுகள், பாராட்டு பெறுவீர்கள். சுபகாரியங்கள் நல்லபடியாக நடக்கும். உடல் நலன் சீராகும்.


மீனம் (பூரட்டா தி 4ம் பாதம் உத்திரட்டாதி ரேவதி)


* பட்டம் பதவி கூடும் * பயணங்கள் பயன் தரும்

நல்ல நட்பும் திறமையும் கொண்ட மீன ராசி அன்பர்களே !

தெய்வபக்தியும், சகல மேன்மையும் கொண்ட உங்களது ராசிக்கு 4.10.2018 அன்று குருபகவான் 9ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் குருவின் பார்வை யானது 1,3,5 ம் இடங்களை வலிமையடையச் செ ய்யவுள்ள து. பாக்கிய ஸ்தா னத்தில் குருபகவான் சஞ்சா ரம் செ ய்வத பல வித நன்மைகளை அள்ளித்தர உள்ளார். திருமண யோக ம் , குழந்தை பாக்கியம், பூர்விக சொ த்து வழியில் லாபம் எல்லா ம் கிடைக்க உள்ள து. தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடல் நலன் பேணவும்.

தொழில் மற்றும் வியாபாரம் செய்வோருக்கு :

கடல் கடந்த வியாபார தொழில் வாய்ப்புகள் கைகூடும். அதிகாரமிக்க பதவிகள். அரசு வேலை வாய்ப்புகள் அமையும். விரும்பிய பதவி. பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். புதிய நிர்வாகப் பொறுப்புகள் தேடி வரும் தங்கள் பேச்சுக்கு தனி மரியாதை கூடும். பழைய கட்டிடப்பணிகள் நிறைவு செய்யலாம். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பழைய வழக்குகள் சாதகமாகும். உள்ளூரில் பணியாற்றும் வாய்ப்பு வந்து சேரும். உடல் நலன் சீராகும். மனதில் மகிழச்சி கூடும். நல்ல பங்குதாரர்கள் அமைவார்கள்.

குடும்ப நலன் முன்னேற்றம் :

வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய வீடு குடிபோகலாம். உறவினர் வழியில் பழைய பகைமை மாறும் கூட்டாகச் சேர்ந்து குலதெய்வ வழிபாடு செய்து வரலாம். பிள்ளைகளால் பெருமைகள் கூடும். வெளிநாட்டும் பயணத் தடைகள் அகலும். சுபகாரியங்கள் நல்லப்படியாக நடக்கும். கனவுகள் நனவாகும்.

பெண்களுக்கு:

விருந்து விழா தொடர்ந்து வரும். கலைத்துறை மற்றும் விளையாட்டுத் துறையிலும் பங்குபெற்று வெற்றி வாகைசூடலாம். பிள்ளைகள் வளர்ப்பில் கூடுதல் கவனம் தேவை. பிரயாணங்களைத் தவிர்க்கவும். வாகன யோகம் கூடும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பதிவாகவில்லை

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory