» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

2 முதல் 18 வயது வரை உள்ளவர்களிடம் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை : மத்திய அரசு அனுமதி

வியாழன் 13, மே 2021 12:25:54 PM (IST)

2 முதல் 18 வயது வரை உள்ளவர்களிடம் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி சோதனை செய்ய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஜன 16ம் தேதி முதல் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், 2 முதல் 18 வயதுடையோருக்கு 2 மற்றும் 3ம் கட்டமாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி மருத்துவ பரிசோதனை செய்ய பாரத் பயோடெக் நிறுவனம் அளித்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2 முதல் 18 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தி 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனை செய்ய மருந்து கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக தன்னார்வலர்களின் 525 குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகளுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் வல்லுநர் குழுவால் பரிசோதனை செய்யப்படவுள்ளது. சோதனை வெற்றிகரமாக நடந்தால் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory