» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

கேம்பஸ் இண்டர்வியூவில் ஸ்காட் கல்வி நிறுவனங்கள் சாதனை : பொதுமேலாளர் பெருமிதம்

வியாழன் 2, மே 2013 1:49:08 PM (IST)ஸ்காட் கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற கேம்பஸ் இண்டர்வியூக்கள் மூலம் அங்கு பயிலும் 52 சதவீத மாணவ மாணவியர்கள் பணிக்கு தேர்வாகி உள்ளதாக அதன் பொதுமேலாளர் தம்பித்துரை பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளார்.

நெல்லை, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஸ்காட் கல்வி நிறுவனம் சார்பில்  15 கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிறுவனத்தின் 4 பொறியியல் கல்லூரிகளில் பயின்ற மாணவ மாணவியர்கள் 629 பேர் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்ற தேர்வாகி உள்ளனர்.
 
வண்ணார்பேட்டை பிரான்சிஸ்சேவியர் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்காட் கல்வி நிறுவனங்களின் பொது மேலாளர் தம்பித்துரை கூறுகையில்.,ஸ்காட் நிறுவனம் கல்வி மற்றும் சமூக சேவை பணிகளை 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செய்து வருகிறது.

தற்போது வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி,  சேரன்மகாதேவியில் இரண்டு ஸ்காட் கல்லூரிகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளத்தில் அமைந்துள்ள மதர் தெரசா பொறியியல் கல்லூரிகளில்  கல்வி முடித்த மாணவ, மாணவிகளுக்கு 2012- 13 ஆண்டுக்கான வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி முகாமை ஸ்காட் கல்வி நிறுவனம் சிடிஎஸ், இஎக்ஸ்எல்,இன்போடெல், டெல், மாவோரிக் சிஸ்டம், சேக்-ஐஜி, ரீச்- அக்கவுண்டண்ட், ஜெஸ்கோ சிம்டெக், கோச்சர், அண்டர் மோடா,மைக்ரோ சிஸ்டம் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுடன் இணைந்து நடத்தியது.இதில்    629 பேர் கேம்பஸ் இண்டர் வியூக்களில்  தேர்வாகி  உள்ளனர்.

தகவல் தொழில் நுட்ப வேலை வாய்ப்புகள் இறங்கு முகத்தில் உள்ள நிலை யில் எங்கள் கல்வி நிறுவன மாணவ மாணவியர்கள் ஏறுமுகத்தில் அதாவது எங்கள் 4 பொறியியல் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ மாணவியர் 1200 பேரில்   52 சதவீதம் பேர் (629பேர்) பணிக்கு தேர்வாகி உள்ளது குறிப்பிடத் தக்கது. வரும் கல்வியாண்டு முதல் முதலாம் ஆண்டு மாணவர்களும் வேலை வாய்ப்பினை எளிதில் பெற்றிடும் வகையில் அவர்களது தனித்திறமைகளை வளர்த்திட ஸ்போக்கன் இங்கிலீஸ் உள்ளிட்ட அடிப்படை பயிற்சிகள் வழங்கபடும்.
    
இதன் மூலம் எங்கள் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ மாணவியர்  படிப்புக் காலம் முடியும் முன்னரே வேலை பெற்றிடும் வாய்ப்பு மேலும் அதிகரிக்கும், இது நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மாணவ. மாணவியர் களுக்கு கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதமாகும் என்றார்.  பேட்டியின் போது எப்.எக்ஸ் கல்லூரியின் முதல்வர் ராஜகோபால், நிர்வாக மேலாளர்கிருஷ்ண குமார், வேலை வாய்ப்பு இயக்குனர் சுதாகரன், வேலை வாய்ப்பு அலுவலர் அலெக்ஸ் சாமுவேல் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து

scadOct 11, 2013 - 04:54:09 PM | Posted IP 117.2*****

எல்லாம் சும்மா .............உழலா ய்

ராஜாJun 13, 2013 - 11:56:11 AM | Posted IP 37.22*****

super college mother theresa engineering college

kannanமே 2, 2013 - 04:50:48 PM | Posted IP 117.2*****

GOOD COLLEGE..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory