» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

வெற்றிக்காக பெண்களுக்கு பரிசு பொருட்களை அள்ளி வீசும் தேசிய கட்சிகள் நெல்லையில் புதிய வியூகம்

புதன் 22, ஜனவரி 2014 4:30:11 PM (IST)

எப்போது வரும் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு என்று அரசியல் கட்சியினர் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர். சிறிய கட்சிகள் முதல் ஓரளவுக்கு ஓட்டு வங்கி உள்ள கட்சிகளை கூட்டணியில் சேர்க்க தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை பேச்சுவார்த்தை நடத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.

தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிப்பிடியால் பேனர் மற்றும் கட்அவுட் கலாச்சாரத்துக்கும், பத்திரிகை,மீடியாக்களில் விளம்பரம் செய்வது ஆகியவை பெருமளவு குறைந்து  விட்டது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை மக்கள் மத்தியில கொண்டு  செலல பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. இதன் உச்ச கட்டமாக தேர்தல் நேரத்தில் பிரசாரம் செய்து வாக்குசேகரிப்பதற்கு ஆள் பற்றாக்குறை நிலை உருவாகி விடுமோ என்ற அச்சம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்னேற்பாடாக பெண்களை குழுவாக சேர்த்து பிரசாரம் செய்வதற்கு ஒப்பந்தம் செய்து கொள்கின்றன அரசியல் கட்சிகள்.

நெல்லை மாவட்டத்தில் ஊருக்கு ஒரு பிரபலமான பெண் விஐபிக்கள் மூலம் அந்தந்த ஊரில் ஒரு கூட்டத்தை அரசியல் கட்சிகள் கூட்டுகின்றன. அந்த் கூட்டத்துக்கு பெண்களை வரவழைத்து அவர்களுக்கு விதவிதமான வகை உணவுகளுடன் அவர்கள் அன்றாடம் தொழிலுக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் பரிசு பொருட்களையும் கொடுக்கின்றனர்.
 
கூட்டத்தில் பங்கேற்கும் பெண்களிடம் அரசியல் கட்சியின் பொறுப்பாளர்கள் பேசுகின்றனர். தேர்தல் வரும் நேரத்தில் நீங்கள் எங்கள் கட்சியோ அல்லது கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்க வேண்டு்ம். உங்களுக்கு   சம்பளம்  மற்றும் உணவும் தரப்படும் என்று கட்சி பொறுப்பாளர்கள் உறுதியளிக்கின்றனர்.

கூட்டத்தை கூட்ட ஏற்பாடுகள் செய்து கொடுக்கும் விஐபிக்களுக்கு பலத்த உபசரிப்பு பின்னர் நடக்கிறது. ஆக தேர்தல் களத்தில் பெண்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய அரசியல் கட்சிகள் தயாராகி விட்டது. அரசியல் கட்சிகளின் இந்த புதிய யுக்தியால் பயனைடய போகிறோம் என்ற மகிழ்ச்சியில் பெண்களும் உற்சாகமாகி விட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory