» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பஸ்நிலையம் : பிரமாண்டமாக புதிய பெயர் பலகை அமைப்பு

வியாழன் 23, ஜனவரி 2014 1:39:48 PM (IST)நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தை வாகன ஓட்டிகள் எளிதில் அடையாளம் தெரிந்து கொள்ளும் விதமாக நுழைவாயிலில் பெரியார் பஸ் நிலையம் என்ற பிரமாண்ட பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் மாவட்டத்தின் பிரதான பகுதியாக விளங்கி வருகிறது. இங்கிருந்து ஒரு காலத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தொலைதூர நகரங்கள் மற்றும் புறநகர், மாநகர் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. அப்போது சந்திப்பு பஸ்நிலையத்தில் இரவு பகல் பாராமல் எப்போதும் மக்கள் கூட்டம் அலை மோதும். இதனால் பஸ் நிலைய உள் பகுதியில் கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு அதிக வருவாய் கிடைத்தது.

இந்நிலையில் நாளுக்குநாள் நெல்லை சந்திப்பு பஸ்நிலைய பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்தது. இதற்கு தீர்வுகாணும் வகையில் பாளை. வேய்ந்தான் குளத்தில் பல கோடி ரூபாய் செலவில் கடந்த 2003ம் ஆண்டு புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து சென்னை, திருச்சி, கோவை, மதுரை, திருச்செந்தூர், தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதனால் சந்திப்பு பஸ் நிலையத்திற்கு பயணிகளின் வரத்து குறைந்தது. கால போக்கில் சந்திப்பு பஸ்நிலையம் தனது முகவரியை தொலைத்து பொலிவிழந்தது. மாநகர அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் அணி வகுப்பதும், காதை பிளக்கும் ஹாரன் ஒலியும் தான் பஸ்நிலையம் என்பதற்கான அடையாளமாக விளங்கியது. இதன் காரணமாக வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் நெடுஞ்சாலை என நினைத்து கொண்டு பஸ் நிலையத்திற்குள் புகுந்து நெரிசலில் சிக்குவது வாடிக்கையானது. போக்குவரத்து போலீசாருக்கு இது பெரிய தலைவலியை ஏற்படுத்தி வந்தது.

இதை தவிர்க்க நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நெல்லை மாநகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் சந்திப்பு நுழை வாயில் பகுதியில் நெல்லை சந்திப்பு பெரியார் பஸ்நிலையம் என பிரமாண்டமாக இரு பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் மதுரை உள்ளிட்ட தொலை தூர நகரங்களுக்கு செல்லும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் மாற்றுப்பாதையில் சென்று மதுரை சாலையில் பயணிப்பதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory