» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: மக்கள் நாடிவரும் அரசியல்வாதிகள்
செவ்வாய் 28, ஜனவரி 2014 4:47:46 PM (IST)

பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் நிலை யில் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை இப்போதே துவங்கியுள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தை நிரூபிக்க பிரமாண்ட பொதுக்கூட்டங்களை நடத்த ஆயத்தமாகி வருகின்றன.
அடுத்த மாதம் உளுந்தூர்பேட்டையில் தேமுதிக மாநாடு நடத்த உள்ள நிலை யில், திமுக திருச்சியில் பிரமாண்டமான மாநாட்டையும், பாஜ கூட்டணி சென் னையில் பொதுக்கூட்டத்தையும் நடத்த உள்ளன. மாநில அளவில் நடக்கும் மாநாடுகள் ஒருபுறமிருக்க குறிப்பிட்ட தொகுதிகளை குறி வைத்திருக்கும் கட்சி கள் மாவட்ட அளவில் பல் வேறு மாநாடுகள் மற்றும் மக்களை திரட்டி பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன.
திமுக கூட்டணியில் தென்காசி தொகுதியை குறி வைத்துள்ள புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி சமீபத்தில் தென்காசியில் செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்டி தொண்டர்களை கவர்ந்தார். தென்காசி தொகுதியின் அடிப்படை பிரச்னைகள் அனைத்தும் அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, பணிகளை உடனடியாக நிறைவேற்ற அரசை கேட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தென்காசி தொகுதியை குறி வைத்துள்ள மற்றொரு கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கடந்த 3 தினங்களாக நெல்லையில் பீடி தொழிலாளர்கள் தேசிய மாநாட்டை நடத்தி முடித்துள்ளது. இதில் பீடி தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் வலியுறுத்தப்பட்டு, அவர்களது பிரச்னைகளை வலியுறுத்தி வரும் பிப்.17ஆம் தேதி யன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமகவினர் முதலும் முடிவுமாக நெல்லை தொகுதியை குறி வைத்து சுற்றிச்சுற்றி வருகின்றனர். தென்மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற அக்கட்சிக்கு உள்ள இரு எம்எல்ஏக்களும் நெல்லை தொகுதியிலே உள்ளனர். எனவே வரும் பிப்ரவரி 16ஆம் தேதி நெல்லை பொருட்காட்சி திடலில் பிரமாண்ட மாநில மாநாட் டை நடத்த அக்கட்சியினர் வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்கின்றனர். இதில் லட்சக்கணக்கானோ ரை திரட்டி அதிமுக கூட்ட ணியில் நெல்லை தொகுதி யை பெற்றுவிட வேண்டும் என கங்கணம் கட்டி வேலை செய்கின்றனர்.
திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள வெள்ளக்கால்வாய் திட்டத்தை கையில் எடுத்து கொண்டு மத்திய அரசிடம் அதற்கான நிதியை பெற்று தர எம்.பி. தலைமையிலான கட்சியினர் தற்போது போராடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் தவோ மருத்துவ பல்கலைக் கழக நேரடி சேர்க்கை அலுவலகம் திறப்பு விழா
வியாழன் 11, டிசம்பர் 2014 4:42:31 PM (IST)

கதர் ஆடை அணிந்து வரும் அரசின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட அதிகாரிகள்
வியாழன் 17, ஜூலை 2014 12:35:31 PM (IST)

அதிமுகவின் சாதனையும், திமுகவின் வேதனையும்! போட்டி பிரச்சாரத்தால் நெல்லையில் பரபரப்பு
திங்கள் 10, பிப்ரவரி 2014 10:49:13 AM (IST)

திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பஸ்நிலையம் : பிரமாண்டமாக புதிய பெயர் பலகை அமைப்பு
வியாழன் 23, ஜனவரி 2014 1:39:48 PM (IST)

வெற்றிக்காக பெண்களுக்கு பரிசு பொருட்களை அள்ளி வீசும் தேசிய கட்சிகள் நெல்லையில் புதிய வியூகம்
புதன் 22, ஜனவரி 2014 4:30:11 PM (IST)

கேம்பஸ் இண்டர்வியூவில் ஸ்காட் கல்வி நிறுவனங்கள் சாதனை : பொதுமேலாளர் பெருமிதம்
வியாழன் 2, மே 2013 1:49:08 PM (IST)
