» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

அதிமுகவின் சாதனையும், திமுகவின் வேதனையும்! போட்டி பிரச்சாரத்தால் நெல்லையில் பரபரப்பு

திங்கள் 10, பிப்ரவரி 2014 10:49:13 AM (IST)நெல்லையில் தேதி அறிவிக்கும் முன்னரே சாதனை, வேதனைகளை சொல்லி திமுக, அதிமுகவினர் போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் நெல்லையில் தேர்தல் களைகட்டி பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே கூட்டணி சேர்ப்பதில் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. எத்தனை சீட்டுகள் தருவீங்கன்னு கேட்டு மீண்டும், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

ஆனால் நெல்லையில் நடப்பதை பார்க்கும் போது தேர்தல் வந்துவிட்டதாக என எண்ண தோன்றுகிறது. எப்படியாவது இந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பிடித்து முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் பதவியில் அமர வைக்க வேண்டும் என்று அதிமுக கட்சியினரும், திமுகவினரோ அதிமுக அரசின் வேதனைகளை கூறி தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியுள்ளது. 

கழகங்களின் இந்த லட்சியத்தின் முதல் கட்டம் தான் ஆளு்ம் கட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்து செல்கிறது திமுக. திமுகவை பொறுத்தவரை அதன் தலைவர் கருணாநிதி கட்டளையிட்டதின் பேரில் ஆளும் அதிமுக அரசால் மக்கள் படும் இன்னல்களை, அவலங்களை துண்டுபிரசுரமாக விநியோகித்து வருகின்றனர்.

நெல்லையிலும் அதிமுக அரசின் அவலங்களை துண்டுபிரசுரமாக அச்சிட்டு மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமயில் மக்களுக்கு விநியோகித்து வருகின்றனர். திமுகவினருக்கு போட்டியாக, அதிமுகவினரும் களம் இறங்கி விட்டனர். அதிமுக அரசின் சாதனைகளை துண்டுபிரசுரமாக விநியோகித்து போட்டி பிரசாரம் செய்து வருகின்றனர்.

இரு கட்சியினரின் சாதனை, வேதனை, போட்டி பிரசாரம் தேர்தல் பிரசாரத்துக்கு முன்னோட்டமாக இருக்கிறது.  போட்டி பிரசாரம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory