» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

நெல்லையில் தவோ மருத்துவ பல்கலைக் கழக நேரடி சேர்க்கை அலுவலகம் திறப்பு விழா

வியாழன் 11, டிசம்பர் 2014 4:42:31 PM (IST)அயல்நாட்டு மருத்துவக் கல்விக்கு புகழ் பெற்ற பிலிப்பைன்ஸ் தவோ மருத்துவ பல்கலைக்கழகத்தின் நேரடி சேர்க்கை அலுவலகத்தை தவோ மருத்துவ பல்கலைக் கழத்தின் தலைவர் டாக்டர். டேவிட் கே. பிள்ளை திறந்து வைத்தார்.

பாளை. வ.உ.சி மைதானம் எதிரில் அமைந்திருக்கும் அரசன் பேக்கரியின் 2வது மாடியில் தவோ மருத்துவ பல்கலைக்கழகத்தின் புதிய அலுவலகம் நேற்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே தவோ மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து வரும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்களுக்கான சேவைகள் மற்றும் வரும் கல்வியாண்டில் புதிதாக சேர விரும்பும் மாணவர்களுக்காக இந்த அலுவலகம் திறக்கப் பட்டுள்ளது. 

இந்த அலுவகத்தை காந்தியவாதி விவேகானந்தன் முன்னிலையில் தவோ பல்கலைக் கழகத்தின் தலைவர் டாக்டர். டேவிட் கே. பிள்ளை திறந்து வைத்தார். விழாவில் டாக்டர்.டேவிட் கே.பிள்ளை பேசியதாவது:- பிலிப்பைன்ஸ் தவோ மருத்துவ கல்லூரியில் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கான சேவையை மேம்படுத்தும் பொருட்டும் பொருளாதாரத்தில் நடுத்தர வர்க்கத்தினரும் மருத்துவம் பயில வழிகாட்டவும் இந்த அலுவலகத்தை திறந்து வைப்பதில் பெருமை கொள்கிறேன். 

தவோ பல்கலைக் கழக நிர்வாகத்துக்கும், படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் இடையே உறவுப் பாலமாக இந்த அலுவலகம் செயல்படும். இங்கு மாணவர்களின் மதிப்பெண்கள், அவர்களது நடவடிக்கைகள் மற்றும் அவர்களது ஈடுபாடு என அனைத்தும் கல்லூரியிலிருந்து பெறப்பட்டு சேமிக்கப்படும். இதை மாணவர்களின் பெற்றோர்கள் தகவலாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். 

தேவைப்பட்டால் தமது குழந்தைகளுடன் மட்டுமல்ல, அவர்களது மருத்துவ பேராசிரியர்களிடமே பேச விடியோ கான்பரன்சிங் வசதி செய்யப் பட்டுள்ளது. பெற்றோர் - மாணவர் கூட்டத்தின் போது 3 பெற்றோர் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்கள் பிலிப்பைன்ஸ் தவோ மருத்துவ பல்கலைக்கழகத்தில் தங்கி மருத்துவக் கல்லூரியின் செயல்பாட்டை அறிய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் தமது குழந்தைகள் படிக்கும் விதம் பற்றி நேரடியாக பிலிப்பைன்ஸ் சென்று பெற்றோர் அறிய முடியும். 

தவோ பல்கலை கழகத்தின் டிரான்ஸ்வேர்ல்டு தங்கும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களின் நலனுக்காக ஒரே நேரத்தில் 1000 பேர் உணவருந்தும் விதத்தில் நவீனமயமாக்கப் பட்ட இயந்திரங்கள் மூலம் உணவு தயாரிக்கப் படுகிறது. பிலிப்பைன்சில் தவோ மருத்துவ பல்கலைக்கழகத்தில் நன்கொடை கிடையாது. இந்தியாவை ஒத்த பருவநிலை, இந்தியாவில் காணப் படும் அதே நோய்கள், ஆங்கில வழிக் கல்வி என்பதால் இந்திய மாணவர்களுக்கு வெளிநாட்டில் தங்கிப் படிக்கும் உணர்வே ஏற்படாது. 

தவோ மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஆசியாவிலேயே இரண்டாவது தடவையாக ஹியூமன் சிமுலேட்டர்ஸ் எனப்படும் மனித மாதிரிகளை வைத்து மாணவர்கள் சிகிச்சை மேற்கொள்வதால் அவர்கள் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் விதத்தில் மிகச் சிறந்த மருத்துவர்களாவது உறுதிப் படுத்தப் படுகிறது

.முக்கியமாக தவோ மருத்துவ பல்கலைக் கழகம் இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளதால் படிப்பு முடிந்து இந்தியாவில் அரசால் அங்கீகரிக்கப் பட்ட மருத்துவராக முடியும். ஏற்கனவே தவோ பல்கலையில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் இந்த கல்வியாண்டில் மருத்துவம் பயில விரும்புபவர்களுக்கு பயிற்சி பெற்ற அதிகாரிகள் இந்த அலுவலகத்தில் வழிகாட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ரதி விவேகானந்தன், டாக்டர். ராஜன், ஓய்வு பெற்ற வருவாய் அலுவலர்கள் சங்க தலைவர் முத்துசாமி, சமூகநல ஆர்வலர் திருமாறன், செங்கோட்டை ஜெயேந்திரா கல்லூரி தாளாளர் ராம்மோகன், இங்கிலாந்து மாணவர்கள் அலிச்டயர், கேட்டி, தவோ அதிகாரிகள் சாம் ஹெல்மன், ராஜா தங்கப்பன், தினேஷ், அனிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory