» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இலங்கை ரசிகர்கள் ரகளையால் தடைபட்ட ஆட்டம்: மைதானத்தில் உறங்கிய தோனி!!

திங்கள் 28, ஆகஸ்ட் 2017 12:34:03 PM (IST)இந்தியா - இலங்கை இடையேயான 3-வது ஒருநாள் போட்டியின்போது இலங்கை ரசிகர்கள் பாட்டில்களை வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டதால் போட்டி சுமார் 35 நிமிடங்கள் வரை தடைபட்டது.

இந்திய கிரிக்கெட் அணி, தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இலங்கைக்கு எதிரான  டெஸ்ட் தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்றது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தது. இந்நிலையில் இந்தியாவுக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்லேகலே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றதால் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஆரம்பத்தில் இந்திய அணி ரன் அடிக்க திணறி வந்தாலும் இறுதியில் 45.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 218 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 124 ரன்களும், தோனி 67 ரன்களும் எடுத்தனர். முன்னதாக 44-வது ஓவர் பந்துவீச்சு ஆரம்பித்தபோது இந்தியா வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டதால் இலங்கை ரசிகர்கள் மைதானத்துக்குள் பிளாஸ்டிக் பாட்டில்களை வீசி எறிந்தனர். இதனால், மைதானத்துக்குள் கலவரத் தடுப்பு போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அணி இதுபோன்ற ரகளையில் ஈடுபடுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2015-ம் ஆண்டு கெட்டாரமா மைதானத்தில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதல் கல்வீச்சு சம்பவம் வரைக்கும் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தனை இடையூறுக்கு மத்தியிலும் ரோஹித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி.

இந்திய அணி வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த நிலையில் அதை பொறுத்துக் கொள்ள முடியாது அந்நாட்டு ரசிகர்கள் போட்டிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மைதானத்துக்குள் பாட்டில்களை வீசி எறிந்தும் கூச்சலிட்டு இடையூறு செய்தனர். இதனால் மைதானத்தில் அப்போது பேட்டிங் செய்துகொண்டிருந்த தோனி சற்றுநேரம் அங்கேயே படுத்துக் கொண்டார். இது குறித்து வர்ணனையாளர்கள் தோனி மைதானத்தில் குட்டித்தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார் என கிண்டலாகக் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory