» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டேக்வான்டோ போட்டி : துாத்துக்குடி மீன்வளக்கல்லூரி மாணவி சாதனை

செவ்வாய் 29, ஆகஸ்ட் 2017 8:38:22 PM (IST)

டேக்வான்டோ போட்டியில் துாத்துக்குடி மீன்வளக்கல்லூரி மாணவி சாதனை படைத்துள்ளார்.

ஆகஸ்ட் 13 முதல் 15 ம் தேதி வரை காஞ்சிபுரம், புனித ஜோசப் கலையரங்கத்தில் காஞ்சிபுர மாவட்ட டேக்வாண்டோ கழகத்தால் நடத்தப் பட்ட 30வது மாநில அளவிலான டேக்வான்டோ போட்டியில், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த நான்காம் ஆண்டு இளங்கலை மாணவி சிந்து 57 கிலோ எடை பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று தூத்துக்குடி மாவட்டத்திற்கும் மீன்வளக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்தார். சாதனை புரிந்த மாணவியை முதல்வர் சுகுமார், உடற்கல்வி இயக்குநர் முனைவர் நடராஜன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து

மனிதன்Aug 30, 2017 - 07:32:55 PM | Posted IP 180.9*****

வாழ்த்துக்கள் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory