» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆஸி. அதிர்ச்சி தோல்வி: வரலாறு படைத்தது வங்கதேசம்!!

புதன் 30, ஆகஸ்ட் 2017 5:44:34 PM (IST)டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது வங்கதேசம் அணி.

ஆஸ்திரேலியா அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. மிர்பூரில் முதல் டெஸ்ட் போட்டி நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 260 ரன்களை எடுத்தது. வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 84 ரன்களை விளாசினார். தமீம் இக்பால் 71 ரன்களை எடுத்தார். 

ஆஸ்திரேலியா அணி சார்பில் பாட் கம்மின்ஸ், நாதன் லியோன் மற்றும் ஆஷ்டன் அகர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதலிலேயே தடுமாறியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 18 ரன்களை எடுத்து இருந்தது. இன்று 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி 74.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 217 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் மாட் ரென்ஷா அதிகபட்சமாக 45 ரன்களையும், ஆஷ்டன் அகர் 41 ரங்களையும் எடுத்தனர். வங்கதேச அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதனால் 43 ரன்கள் முன்னிலை பெற்று அசத்தியது வங்கதேசம். 

இரண்டாவது இன்னிசை தொடங்கிய வங்கதேச அணி 221 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. தமிம் இக்பால் அதிகபட்சமாக 78 ரன்களை குவித்தார். எனவே ஆஸ்திரேலியாவுக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை ஆஸி.யை டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் வீழ்த்தியதேயில்லை. இந்த கவுரவத்தை தக்க வைத்துக்கொள்ள கடுமையாக போராடினார் டேவிட் வார்னர். ஆனால் மற்ற வீரர்கள் கைகொடுக்கவில்லை. வார்னர் 112 ரன்களை குவித்து அவுட்டான நிலையில், 244 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி, 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்ஸதிரேலியா தோற்றுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் அல்ஹசன்தான் போட்டியை திசை திருப்பினார். முதல் இன்னிங்சை போலவே 2வது இன்னிங்சிலும் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது வங்கதேச வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.


மக்கள் கருத்து

மனிதன்Aug 30, 2017 - 07:32:25 PM | Posted IP 180.9*****

வங்காளதேச அணிக்கு வாழ்த்துக்கள் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory