» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலகக்கோப்பை நேரடி தகுதி: இலங்கை அணிக்கு சிக்கல்!!

வெள்ளி 1, செப்டம்பர் 2017 3:30:41 PM (IST)

இந்திய அணியுடன் நேற்று மோதிய போட்டியில் தோல்வி அடைந்த இலங்கை அணி, நேரடியாக உலகக்கோப்பை 2019-ல் தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

கொழும்புவில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் 376 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்த்து இலங்கை அணி 42.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மீண்டும் ஒரு பரிதாபத் தோல்வியைச் சந்தித்தது.இதன் மூலம் இந்திய அணி 4-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. தங்கள் சொந்த மண்ணில் மிகப்பெரிய ஒருநாள் தோல்வியை இலங்கை அணி சந்தித்தது.

வியாழக்கிழமை தோல்விக்குப் பிறகு இலங்கை அணி நேரடியாக உலகக்கோப்பை 2019-ல் தகுதி பெறுவது சிக்கலுக்குள்ளாகியுள்ளது. இந்த ஒருநாள் தொடரில் 2 போட்டிகளில் இலங்கை வென்றிருந்தால் நேரடியாகத் தகுதி பெற்றிருக்கும். ஆனால் இப்போது தொடர் தோல்விகளால் மே.இ.தீவுகள் அணியின் அயர்லாந்துக்கு எதிரான ஒரே ஒருநாள் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான மே.இ.தீவுகளின் 5 போட்டிகள் முடிவுகளை எதிர்நோக்கியுள்ளது.

ஆனாலும், மே.இ.தீவுகள் அயர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்தை 5-0 என்று வீழ்த்த வேண்டும், இது மிகமிகக் கடினமே. செப்டம்பர்30 கட் ஆஃப் தேதிக்குள் இலங்கை நேரடியாகத் தகுதி பெற வாய்ப்புகள் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் வரும் ஞாயிறன்று இலங்கை இந்தியாவை வீழ்த்தினால் 88 புள்ளிகள் பெறும். ஆனால் மே.இ.தீவுகள் தனது 6 போட்டிகளிலும் வென்றால் அதுவும் 88 புள்ளிகளில் வந்து நிற்கும். அப்போது சில தசமப் புள்ளிகளில் இலங்கையை பின்னுக்குத் தள்ளி மே.இ.தீவுகள் தகுதி பெறும்.

ஒருவேளை இலங்கை ஞாயிறன்று நடைபெறும் 5-வது போட்டியிலும் தோற்றால் அயர்லாந்தை மே.இ.தீவுகள் வீழ்த்தி பிறகு இங்கிலாந்தை 4-1 என்று மே.இ.தீவுகல் வீழ்த்திவிட்டால் மே.இ.தீவுகள் நேரடியாகத் தகுதி பெற்று விடும். மே.இ.தீவுகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டால் இலங்கை அணி தகுதிச் சுற்றுகளில் விளையாடி உலகக்கோப்பைக்குத் தகுதி பெற வேண்டும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory