» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமையை வாங்கியது ஸ்டார் நிறுவனம்

திங்கள் 4, செப்டம்பர் 2017 2:38:53 PM (IST)

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை ரூ.16,347.5 கோடிக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் 2008ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் பிசிசிஐ மூலம் நடத்தப்பட்டு வருகிறது. பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இத்தொடர் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த தொடருக்கு இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுதும் ரசிகர்கள் உள்ளனர். மேலும் இதில் விளையாடிய நிறைய வீரர்கள் தற்போது இந்திய அணியிலும் ஆடி வருகின்றனர்.

இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை பெற்ற சோனி நிறுவனத்தின் ஒப்பந்தம் இந்த ஆண்டுடன் முடிந்துள்ளது.இதையடுத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் உரிமத்துக்கான ஏலம் இன்று நடைபெற்றது. இதில், ரூ.16,347.5 கோடி ஏலத்தொகைக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் ஐபிஎல் தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை வளைத்துப் போட்டிருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory