» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மீண்டும் கோபிசந்திடமே செல்லும் சாய்னா நேவால்

திங்கள் 4, செப்டம்பர் 2017 8:57:24 PM (IST)

பயிற்சியாளர் விமல் குமாரிடமிருந்து பிரிந்து மீண்டும் கோபி சந்திடம் பயிற்சி பெறவுள்ளார் பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால்.

இதுகுறித்து ட்விட்டரில் சாய்னா நெவால் கூறியதாவது: கோபிசந்த் அகாடமியில் மீண்டும் பயிற்சி பெற முடிவெடுத்துள்ளேன். இதுகுறித்து கோபி சந்த் சாரிடம் பேசினேன். எனக்கு உதவியளிக்க அவர் முன்வந்ததற்கு நன்றி. என் பாட்மிண்டன் வாழ்க்கையின் இந்தக் காலகட்டத்தில் என் குறிக்கோள்களை நிறைவேற்ற அவர் உதவுவார் என எண்ணுகிறேன். 

கடந்த மூன்று வருடங்களாக எனக்கு உதவியாக இருந்த விமல் சாருக்கு நன்றி. உலகின் நம்பர்.1 வீராங்கனையாக அவர் எனக்கு உதவியுள்ளார். 2015, 2017-ல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரு பதக்கங்களையும் (வெள்ளி மற்றும் வெண்கலம்) பல சூப்பர் சீரீஸ் பட்டங்களையும் வெல்ல உதவி யுள்ளார். மீண்டும் ஹைதராபாத்துக்குத் திரும்பியுள்ளேன். அனைவரும் எனக்கு ஆதரவளிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். 

2014 செப்டம்பர் முதல் பெங்களூரில் விமல் குமாரிடம் பயிற்சி பெற்று வந்த சாய்னா நெவால், தற்போது ஹைதராபாத்தில் கோபி சந்திடம் பயிற்சி பெற முடிவெடுத்துள்ளார். சாய்னாவின் இந்த முடிவு பாட்மிண்டன் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சியாளர் விமல் குமார் இதுகுறித்து தனது கருத்துகளைத் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.சாய்னா முதலில் கோபி சந்திடம் தான் பயிற்சி பெற்றால் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory