» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி-20 கிரிக்கெட்.. விராட் கோலி அதிரடியில் வீழ்ந்தது இலங்கை .. தொடர் முழுதையும் வென்றது இந்தியா!!

வியாழன் 7, செப்டம்பர் 2017 11:21:35 AM (IST)விராட் கோலி அதிரடியில் இலங்கை அணி பரிதாப தோல்வியை சந்தித்தது. இலங்கையை டி20-யிலும் வீழ்ததிய இந்திய அணி ஒட்டுமொத்தத் தொடரையும் 9-0 என்று கைப்பற்றியது.

டெஸ்ட்டில் 3-0, ஒருநாள் தொடரில் 5-0, டி20-யில் 1-0 என்று இலங்கையை 9-0 என்று இந்தத் தொடரில் இந்திய அணி ஒயிட்வாஷ் செய்தது. டாஸ் வென்ற விராட் கோலி முதலில் இலங்கையை பேட் செய்ய அழைத்தார். அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்களை எடுத்தது. . தொடர்ந்து ஆடிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

கடைசி 2 ஒருநாள் போட்டிகளிலும் சதம் கண்ட விராட் கோலி, இந்த முறை டி20-யிலும் தனது சமரசமற்ற அபார பேட்டிங் திறமையை விரட்டலில் வெளிப்படுத்தினார்.  மணீஷ் பாண்டே தனக்கு தொடர்ச்சியாக வாய்ப்பளிக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். 50 நாட் அவுட், 36, நேற்று 51 நாட் அவுட் என்று அவர் ஒரு ஃபோர்ஸாக மாறி வருகிறார். டி20 சர்வதேச போட்டியில் 1000 ரன்களையும் 50 ரன்களுக்கும் மேல் சராசரியும் வைத்துள்ள ஒரே வீரரான விராட் கோலி 54 பந்துகளில் 82 ரன்களை விளாசினார், இதில் 7 பவுண்டரிகள் 1 சிக்சர் அடங்கும், 

மணீஷ் பாண்டேவும் கோலியும் இணைந்து 119 ரன்களை 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். மணீஷ் பாண்டேயும் அழுத்தம் எதுவும் இல்லாமல் அனாயசமாக ஆடி 36 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்தார். அந்த ஒரு சிக்ஸ், மேத்யூஸ் பந்தைத் தூக்கி நேராக அடித்த சிக்ஸ் ஆகும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory