» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெயில் தாளாமல் 2 மணி நேரத்தில் 4.5 கிலோ எடை குறைந்த ஆஸ்திரேலிய வீரர்

வியாழன் 7, செப்டம்பர் 2017 3:30:19 PM (IST)வங்க தேசத்துடனான டெஸ் போட்டி 2 மணி நேரம் வெயிலில் பேட்டிங் செய்ததால் ஆஸ்திரேலிய வீரர் ஹேண்ட்ஸ்காம்ப் 4½  கிலோ எடை குறைந்துள்ளார்.  

ஆஸ்திரேலியா-வங்கதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 113.2 ஓவர்களில் 305 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 64 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது.  டேவிட் வார்னர் தனது 20-வது சதத்தை நிறைவு செய்தார். டேவிட் வார்னர் சதத்துக்கு 209 பந்துகளை எதிர்கொண்டார். 

டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த மெதுவான சதம் இது தான். ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியிலும் அவர் சதம் எடுத்து இருந்தார். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 118 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்தது.  இந்த போட்டியின் போது, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஹேண்ட்ஸ்காம்ப் அதிக வெப்பத்தின் காரணமாக, 4.5 கிலோ எடை குறைந்துள்ளார். ஆசிய கண்டத்தில் நிலவும் அதிகமாக வெப்பத்தை ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த ஆஸ்திரேலிய, நியூசிலாந்து, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வீரர்களால் தாங்கிகொள்ள முடியாது.

ஆசிய நாடுகளுக்கு விளையாட செல்லும்போது அவர்கள் வெப்பத்தை தணிக்க முடியாமல் உடல் அளவில் பெரும் சிரமத்திற்கு ஆளாவது வழக்கமான ஒன்று. தற்போது வங்க தேசத்தின் தலைநகரான சிட்டகாங்கில் அதிக வெப்பம் நிலவி வருவதால் ஆஸ்திரேலிய வீரர்களால் வெப்பத்தை தாங்க முடியவில்லை. அதிக வெப்பத்தின் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் ஹேண்ட்ஸ்காம்ப் வெப்பத்தை தாங்க முடியாமல் 4.5 கிலோ எடையை இழந்துள்ளார்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சுமார் இரண்டரை மணி நேரம் ஹேண்ட்ஸ்காம்ப் பேட்டிங் செய்தார். 113 பந்துகளை சந்தித்து 69 ரன்கள் சேர்த்து அவுட்டாகாமல் இருந்தார். வங்க தேசத்தின் சுழற்பந்துகளை லாவகமாக சமாளித்த ஹேண்ட்ஸ்காம்பால் வெப்பத்தை சமாளிக்க முடியவில்லை. அவரது உடல் வியர்வையால் நனைந்தது. அடிக்கடி ஐஸ் கட்டி பேக் வைத்து வெப்பத்தை தணிக்க முயற்சித்தார் இருந்தாலும் முடியவில்லை. இரண்டரை மணி நேரம் வெயிலில் நின்று விளையாடியதன் காரணமாக அவரது எடையில் 4.5 கிலோ குறைந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory