» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள்!

வெள்ளி 8, செப்டம்பர் 2017 12:27:43 PM (IST)இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 17-ம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 17-ம் தேதி பகலிரவாக நடைபெறுகிறது.

அதற்கு முன்பு செப்டம்பர் 12 அன்று ஆஸ்திரேலிய அணி சென்னையில் பயிற்சி ஆட்டம் ஒன்றில் பங்கேற்கிறது. பிசிசிஐ தலைவர் அணியுடன் மோதுகிறது.  தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிசிசிஐ தலைவர் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். அதில், டிஎன்பிஎல்-லில் கலக்கிய வாஷிங்டன் சுந்தர், ரஹில் ஷா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 

மேலும் அணியின் பயிற்சியாளராக முன்னாள் தமிழக வீரர் ஹேமங் பதானி அறிவிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ தலைவர் அணி: ராகுல் திரிபாதி, மயங்க் அகர்வால், ஷிவம் செளத்ரி, நிதிஷ் ராணா, கோவிந்தா பொடார், குல்கீரத் மன், ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, அக்‌ஷய் கர்ணேஸ்வர், குல்வந்த் கெஜ்ரோலியா, குஷங் படேல், அவேஷ் கான், சந்தீப் சர்மா, வாஷிங்டன் சுந்தர், ரஹில் ஷா. பயிற்சியாளர்: ஹேமங் பதானி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory