» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியாவில் ஆஸி., நியூசி. அணிகள் சுற்றுப்பயணம் : கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியீடு!!

வெள்ளி 8, செப்டம்பர் 2017 3:40:21 PM (IST)இந்தியாவுடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் போட்டி தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அடுத்தடுத்து 9 போட்டிகளில் வெற்றி பெற்று ஹேட்ரிக் ஒயிட் வாஷ் செய்து சாதனையைப் படைத்தது.  அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோத உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. 

இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 17–ந்தேதி நடக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்குகிறது. அன்றைய தினம், சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுண்டர்களில் டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்ளலாம். டிக்கெட்டின் குறைந்த பட்ச விலை ரூ.1,200. மேலும் ரூ.2,400, ரூ.4,800, மற்றும் சொகுசு வசதி கொண்ட ரூ.8 ஆயிரம், ரூ.12 ஆயிரம் ஆகிய விலைகளிலும் டிக்கெட்டுகள் விற்கப்படும். அதே நாளில் www.bookmyshow.com இணையதளத்திலும் டிக்கெட்டுகளை வாங்கலாம்.

இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த தொடரின் போட்டிகளுக்கான தேதிகளை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. இந்தியாவுடனான ஆஸ்திரேலியாவின் போட்டிகளானது செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 13 ஆம் தேதியும், நியூசிலாந்து இடையேயான போட்டிகள் அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதியும் நிறைவடைகின்றன. கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இந்த போட்டிகள் நடைபெறவுள்ளதால், இதற்கான எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. பயிற்சி ஆட்டம் - 12 செப். - சென்னையில் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் 

முதல் ஆட்டம் :  17 செப். - சென்னை

2வது ஆட்டம் :  21 செப். - கொல்கத்தா

3வது ஆட்டம் :  24 செப். - இந்தூர்

4வது ஆட்டம் :  28 செப். - பெங்களூரு

5 வது ஆட்டம் :  1 அக். - நாக்பூர்

டி-20 போட்டிகள்

1வது ஆட்டம்: 7 அக். - ராஞ்சி

2வது ஆட்டம்: 10 அக். - கவுகாத்தி

3வது ஆட்டம்: ஹைதராபாத்

நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் 


1வது பயிற்சி ஆட்டம் - 17 அக். - மும்பை

2வது பயிற்சி ஆட்டம் - 19 அக். - மும்பை

1வது ஆட்டம் :  22 அக். - மும்பை

2வது ஆட்டம் :  25 அக். - புனே

3வது ஆட்டம் :  29 அக். - உ.பி

டி-20 போட்டிகள்

1வது ஆட்டம்: 1 நவ. - டெல்லி

2வது ஆட்டம்: 4 நவ. - ராஜ்கோட்

3வது ஆட்டம்: 7 நவ. - திருவனந்தபுரம்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory