» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அதிகபட்சம் 10 வருடங்கள்: ஓய்வு குறித்து விராட் சூசகம்!!

சனி 9, செப்டம்பர் 2017 5:37:48 PM (IST)

நம் இலக்கை அடையும்வரை தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அறிவுரை கூறியுள்ளார். 

டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் விராட் கோலி கூறியதாவது: முயற்சி செய்வதற்கு முன்பே நாம் நம்மைக் கட்டுப்படுத்திக்கொள்கிறோம். பெரும்பாலானவர்கள் எழுபது சதவிகித முயற்சியின்போது நிறுத்திக்கொள்கிறீர்கள். நம் இலக்கை அடையும்வரை தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும். 

எனக்கு கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 10 வருடங்கள் மட்டுமே உள்ளன. இதனால் தற்போது கடுமையாக முயற்சி செய்கிறேன். கிரிக்கெட்டிலிருந்து விலகிய பிறகு என் வாழ்க்கையில் நான் கிரிக்கெட் விளையாடப் போவதில்லை. ஆகவே வாய்ப்பு கிடைக்கும்போது சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறேன். அதற்காக முழுமுயற்சி எடுக்கிறேன். சிறிய விஷயங்களில் - நான் என்ன சாப்பிடுகிறேன், எப்படிப் பயிற்சி எடுக்கிறேன் போன்றவற்றில் கவனம் எடுத்துக்கொள்கிறேன் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory