» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பொறுப்புகளை உணர்ந்து தோனி ஆட வேண்டும் : சேவாக் அறிவுரை!

செவ்வாய் 7, நவம்பர் 2017 4:06:27 PM (IST)

டி-20 ஆட்டத்தில் தனக்கான பொறுப்புகள் என்ன என்பதை தோனி உணர வேண்டும் எனமுன்னாள் வீரர் சேவாக் அறிவுரை கூறியுள்ளார். 

இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. மொத்தம் 3 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடர், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதை அடுத்து சமநிலையில் உள்ளது. 

எனவே, கடைசி ஆட்டத்தில் வென்று எந்த அணி தொடரைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலோங்கியுள்ளது. 2-வது டி20 போட்டியில் தோனி 49 ரன்கள் எடுத்தபோதும் அவர் விளையாடிய விதம் விமரிசனங்களை வரவழைத்துள்ளது. இதனால் தோனியை அணியிலிருந்து நீக்கவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

இந்நிலையில் முன்னாள் வீரர் சேவாக், தோனியின் டி20 ஆட்டம் குறித்துக் கூறியதாவது: தனக்கான பொறுப்புகள் என்ன என்பதை தோனி உணர வேண்டும். பெரிய இலக்கை விரட்டும்போது ஆட்டத்தின் போக்கை ஆரம்பத்திலிருந்தே அவர் மாற்றவேண்டும். முதல் பந்திலிருந்து அடித்தாடவேண்டும். இந்திய அணி நிர்வாகம் இதை அவருக்கு உணர்த்த வேண்டும். ஆனால் டி20 கிரிக்கெட்டிலும் கோலி அணிக்கு தோனி தேவைப்படுகிறார். சரியான நேரத்தில் டி20 போட்டியிலிருந்து தோனி விலகுவார். எந்த ஒரு இளம் வீரருக்கும் இடைஞ்சலாக இருக்கமாட்டார் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory