» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தேசியகீதம் பாடும் போது சூயிங்கம் சாப்பிட்டாரா கோலி ?

வெள்ளி 17, நவம்பர் 2017 2:09:40 PM (IST)

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் டெஸ்ட் போட்டி தொடக்கத்தில் தேசியகீதம் பாடும் போது கேப்டன் கோலி சூயிங்கம் சாப்பிடுவது போன்ற வீடியோ வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.

இந்தியா இலங்கை அணிகளுக்கிடையேயான டெஸ்ட் நேற்று கொல்கத்தாவில் தொடங்கியது.இதில் போட்டி தொடங்குவதற்கு முன் தேசிய கீதத்தைப் பாட இரு அணி வீரர்களும் மைதானத்தில் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். அப்போது இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட போது இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி சுவிங்கத்தை மென்று கொண்டிருப்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல் முன்னணி வீரராகவும்,  திகழும் விராத் கோலி தேசிய கீதத்தை அவமதிக்கும் விதத்தில் சுவிங்கம் சாப்பிட்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory