» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ரஞ்சி டிராபி சாம்பியன் : வரலாறு படைத்தது விதர்பா
திங்கள் 1, ஜனவரி 2018 9:41:17 PM (IST)

ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனைப் படைத்தது விதர்பா.
பிசிசிஐ-யின் முதல்தர உள்ளூர் போட்டியான ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்தூரில் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இதில் டெல்லி - விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ரஞ்சி டிராபி கிரிக்கெட் வரலாற்றில் விதர்பா முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. அத்துடன் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்கின. டாஸ் வென்ற விதர்பா அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி டெல்லி முதல் இன்னிங்சை தொடங்கியது.
விதர்பா அணியின் ராஜ்னீஷ் குர்பானி வேத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் டெல்லி அணி 295 ரன்னில் சுருண்டது. டெல்லி அணியின் ஷோரே 145 ரன்களும், ஹிம்மத் சிங் 66 ரன்களும் சேர்த்தனர். குர்பானி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்ததுடன் 6 விக்கெட் சாய்த்தார். அதன்பின் விதர்பா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் பைஸ் பாசல் (67), வாசிம் ஜாபர் (78), சர்வாத் (79) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தாலும், அக்சய் வாத்கரின் அபார சதத்தாலும் விதர்பா நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 528 ரன்கள் குவித்திருந்தது. அக்சர் வாத்கர் 133 ரன்னுடனும், நேரல் 56 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வாத்கர் நேற்றைய 133 ரன்னிலேயே வெளியேறினார். நேரல் 74 ரன்கள் எடுக்க விதர்பா 163.4 ஓவரில் 547 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. டெல்லி அணி சார்பில் சாய்னி அதிகபட்சமாக 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். விதர்பா அணி முதல் இன்னிங்சில் டெல்லியை விட 252 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் டெல்லி அணி 252 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது.
சண்டேலா, காம்பீர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சண்டேலா 9 ரன்கள் எடுத்த நிலையில் வகார் பந்தில் ஆட்டமிழந்தார். காம்பீர் 36 ரன்கள் எடுத்த நிலையில் குர்பானி பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த ஷோரோ, ராணா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஷோரே 62 ரன்களும், ராணா 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க டெல்லி அணி தடுமாற ஆரம்பித்தது. கேப்டன் ரிஷப் பந்த் 32 ரன்களும், விகாஸ் மிஸ்ரா 34 ரன்களும் சேர்க்க டெல்லி அணி 280 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வித்ர்பா அணி சார்பில் வாகர் 4 விக்கெட்டும், சர்வாத் 3 விக்கெட்டும், குர்பானி 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
ஒட்டுமொத்தமாக டெல்லி 28 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதனால் விதர்பா அணிக்கு 29 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. விதர்பா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் முதன்முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கோப்பையையும் கைப்பற்றி விதர்பா சாதனைப் படைத்துள்ளது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டும், 2 இன்னிங்சில் 2 விக்கெட்டும் வீழ்த்தி ராஜ்னீஷ் குர்பானி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்கள் அன்புக்கு நானடிமை நீங்க வேற லெவல் மாஸ்யா : ஹர்பஜன்சிங் ட்விட்டர் பதிவு
வியாழன் 19, ஏப்ரல் 2018 8:34:13 PM (IST)

ராஜஸ்தான் சொதப்பல் : கொல்கத்தா அணி 3வது வெற்றி
வியாழன் 19, ஏப்ரல் 2018 10:55:35 AM (IST)

ஆரஞ்சு தொப்பி இப்போ அவசியமா? விராட் விரக்தி!!
புதன் 18, ஏப்ரல் 2018 5:43:56 PM (IST)

ரோஹித் சர்மா அதிரடியில் மும்மைக்கு முதல் வெற்றி : பெங்களூரு அணியை வீழ்த்தியது!!
புதன் 18, ஏப்ரல் 2018 10:33:35 AM (IST)

கிறிஸ் கெயில் அதிரடி ... சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி!!
திங்கள் 16, ஏப்ரல் 2018 11:13:30 AM (IST)

காமன்வெல்த் போட்டி கோலாகல நிறைவு விழா: 66 பதக்கங்களுடன் இந்தியா மூன்றாமிடம்
திங்கள் 16, ஏப்ரல் 2018 11:08:23 AM (IST)
