» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல்: தோனியோடு களமிறங்கப் போவது யார் யார்? ரசிகர்கள் ஆர்வம்

செவ்வாய் 2, ஜனவரி 2018 4:11:34 PM (IST)

இந்தாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தல தோனி தலைமையில் களமிறங்குவது ஏற்கனவே உறுதியாகி விட்டது. தோனியோடு வேறு யார் யார் களமிறங்கப் போகிறார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது. 

சூதாட்டப் புகார்களால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு சீசனில் விளையாடவில்லை. அதனால், அந்த அணிகளுக்காக விளையாடிய வீரர்கள் வேறு அணிகளுக்காக விளையாடினர். இந்த நிலையில், இந்த தடைக் காலம் முடிந்து, இரண்டு அணிகளும், இந்த சீசனில் களமிறங்க உள்ளன. அதனால், ஏற்கனவே விளையாடிய வீரர்களை திரும்பப் பெறும் வகையில், ஐபிஎல் அணிகளுக்கு புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ஒவ்வொரு அணியும் தனக்காக விளையாடிய மூன்று வீரர்களை திரும்பப் பெறலாம். இதைத் தவிர, ஒரு வீரரை ரைட் டு மேட்ச்’ என்ற அடிப்படையில் வாங்க முடியும். இந்த சீசனில் சென்னை கிங்ஸ் களமிறங்குகிறது என்ற உடனேயே, வேறு எந்த மாற்றுக் கருத்தும் இல்லாமல் கேப்டன் கூல் தோனிதான் அந்த அணிக்கு கேப்டன் என்பது உறுதியாகி விட்டது. அவருடன் தளபதிகள் சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடிவது உறுதியாகி விட்டது. வெஸ்ட் இன்டீஸ் வீரர் டாவ்னே பிராவோவா, ரைட் டு மேட்ச் கீழ் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாதம் 27ம் தேதி வீரர்கள் ஏலம் நடக்க உள்ளது. 

அதற்கு முன்னதாக, தக்க வைக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை, ஐபிஎல் அணிகள் 4ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, கேப்டன் ரோஹித் சர்மா, ஹார்திக் மற்ரும் குருனால் பாண்டயா சகோதரர்களை தக்க வைக்க முடிவு செய்துள்ளது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி, ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டேவிட் வார்னரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் தக்க வைக்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory