» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நியூசிலாந்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி

சனி 20, ஜனவரி 2018 4:27:54 PM (IST)நியூசிலாந்தில் நடக்கும் 4 நாடுகள் அழைப்பு ஹாக்கியில் நியூசிலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி. 

இந்தியா, ஜப்பான், பெல்ஜியம், நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான, நான்கு நாடுகள் அழைப்பு ஹாக்கி போட்டி நியூசிலாந்தில் நடக்கிறது. இந்த ஆண்டின் முதல் சர்வதேசப் போட்டியான இதில், இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானை 6-0 என்ற கோல் கணக்கில் வென்றது. பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த நிலையில், மூன்றாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி மோதியது. 

இதில், 3-1 என்ற கோல் கணக்கில் வென்று, பைனலுக்கு நுழைந்தது. நாளை நடக்கும் பைனலில் பெல்ஜியம் அணியை சந்திக்கிறது. மற்றொரு லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் 4-1 என்று ஜப்பானை வென்றது. பெல்ஜியத்துக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. ஆட்டம் துவங்கிய நொடியில் இருந்து ஆக்ரோஷமான அதிரடி ஆட்டத்தில் இந்தியா ஈடுபட்டது. 

இரண்டாவது நிமிடத்திலேயே கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஹர்மன்பிரீத் சிங் கோலாக்கினார். 12வது நிமிடத்தில் தில்பிரீத் சிங் கோலடித்து முன்னிலையை உயர்த்தினார். இதனிடையில், 42வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை நியூசிலாந்து கோலாக்க, ஸ்கோர் 2-1 என மாறியது. இருந்தாலும், இந்திய அணியின் அதிரடி ஆட்டம் தொடர்ந்தது. 47வது நிமிடத்தில் மன்தீப் சிங் மற்றொரு கோலடிக்க இந்தியா 3-1 என்று வென்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory