» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆஸியை பழிதீர்த்தது இங்கிலாந்து : ஒரு நாள் தொடரை வென்று அசத்தல்!!

திங்கள் 22, ஜனவரி 2018 4:48:01 PM (IST)சிட்னி நகரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இங்கிலாந்து பறிகொடுத்த நிலையில், ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. சிட்னி நகரில் 3-வது ஒருநாள் போட்டியில்,  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 303 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் மட்டுமே சேர்த்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னணி பெற்று தொடரை தனதாக்கியுள்ளது. பாரம்பரியம் கொண்ட ஆஷஸ் கோப்பைத் தொடரை ஆஸ்திரேலிய அணியிடம் பறிகொடுத்த இங்கிலாந்து அந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் ஒரு நாள் தொடரைக் வென்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory