» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

முதல் போட்டியில் இலங்கையிடம் தோல்வி ஏன்? இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டி

புதன் 7, மார்ச் 2018 10:58:17 AM (IST)



தவறுகளில் இருந்து இந்திய அணி வீரர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். 

இலங்கையின் 70-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடையே 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியாவும் இலங்கையும் நேற்று மோதின. இப்போட்டியில் இந்திய அணியை இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், இந்திய அணி வீரர்கள் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள் என்றார். ரோகித் சர்மா மேலும் கூறுகையில், "  இந்த போட்டியின் முலமாக எங்கள் வீரா்கள் தங்களுடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வா்கள். இலங்கை அணியின் வெற்றிக்கான அனைத்து பெருமைகளும் அந்த அணியின் பேட்ஸ்மேன்களையே சாரும். 175 ரன்கள் என்பதை வெற்றிக்கான ரன்களாக நாங்கள் கருதினோம். 

இறுதி கட்டத்தில் இன்னும் வேகத்தை நாங்கள் அதிகரித்து இருக்கலாம். ஆடுகளம் சிறப்பானதாக இருந்தது. இது போன்ற ஆடுகளங்களில் பேட்டிங்கை மிகவும் வலுவாக வெளிப்படுத்துவது அவசியம். பந்து வீச்சை பொறுத்தவரை, எங்கள் அணியின் பந்து வீச்சு வரிசையில் போதிய அனுபவம் இருந்ததாகவே நான் நினைக்கிறேன். இது போன்ற சூழல்களில் விளையாடிய அனுபவம் எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு போதிய அளவில் இருந்தது” என்றார்.  இதே மைதானத்தில் வரும் வியாழக்கிழமை நடக்கவிருக்கும் 2-வது 20 ஓவர் லீக் போட்டியில், இந்திய அணி வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory