» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய கிரிக்கெட்அணி வீரர்களின் சம்பளம் உயர்வு : பிசிசிஐ அறிவிப்பு

புதன் 7, மார்ச் 2018 8:10:49 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளத்தை பிசிசிஐ உயர்த்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடப்பு சீசனுக்கான புதிய ஊதிய ஒப்பந்த முறையை பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் இதில் இந்திய ஆண்கள் அணிக்குப் புதிய பிரிவை ஏற்படுத்தியுள்ளது. இதில் இடம்பெறும் வீரர்களுக்கு அதிகபட்ச ஊதியம் வழங்கப்படவுள்ளது.

அக்டோபர் 2017 முதல் செப்டம்பர் 2018 வரை யிலான இந்த புதிய ஊதிய ஒப்பந்த முறையானது வீரர்களின் ஆட்டத்திறன் மற்றும் உலகளவிலான அனைத்து கிரிக்கெட் சங்கங்களின் ஊதிய அளவை அடிப்படையாகக் கொண்டு வழங்கியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.  

கிரேட் ஏ+ பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ரூ.7 கோடி, கிரேட் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ரூ.5 கோடி, கிரேட் பி பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ரூ.3 கோடி, கிரேட் சி பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ரூ.1 கோடி ஊதியம் வழங்கப்படவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory