» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மனைவியுடன் விரைவில் பிரச்சினைகள் தீரும்: மொகமது ஷமி நம்பிக்கை

வியாழன் 8, மார்ச் 2018 5:44:13 PM (IST)

பின்னணியில் ஏதோ சதி நடக்கிறது, மனைவியுடனான  பிரச்சினைகள் விரைவில்  தீரும் என்று ஷமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் பந்து வீச்சாளரான  "ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. அவரது குடும்பத்தினர் என்னை கொடுமைபடுத்துக்கின்றனர். அவரது தாயார், சகோதரர் என அனைவரும் என்னை தவறாக பேசுகின்றனர்" என்று ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் நேற்று புகார் தெரிவித்திருந்தார். மேலும் ஷமியின் வாட்ஸ் அப், ஃபேஸ் புக் மெசெஞர் உரையாடல்களையும் அவர் வெளியிட்டார், இதில் ஷமி பல பெண்களுடன் உரையாடியிருப்பது பதிவாகியுள்ளது. மேலும் அந்தப் பெண்களின் புகைப்படம், தொலைபேசி எண்களையும் ஹசின் ஜஹான் வெளியிட்டிருந்தார்.

ஆனாலும் சட்ட நடவடிக்கைக்கு முன்னதாக ஷமி தன்னிடம் மீண்டும் திருந்தி வருவார் என்று மனைவி ஜஹான் நம்புவதாக இவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இந்நிலையில் ஷமி கூறியதாவது: என் சொந்த வாழ்க்கை பற்றி எழுந்த அவதூறுகளை நான் மறுக்கிறேன். எனக்கு எதிராக சதி நடக்கிறது, என்னுடைய கிரிக்கெட் ஆட்டத்தை கெடுக்க சில வேலைகள் நடந்து வருவதாகவே கருதுகிறேன். அனைத்துக் குற்றச்சாட்டுகளும் அடிப்படை ஆதாரமற்றது. அதற்கு அர்த்தம் இல்லை. இதன் பின்னணி என்னவென்பது தெரியாமல் நான் இது பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. இதன் பின்னணியில் சதி உள்ளது, என் ஆட்டத்தை கெடுக்கும் முயற்சியும் சதியும் தெரிகிறது.

நான் என் மனைவி ஹசினை தொடர்பு கொள்ள முயற்சித்தேன் அவர் என் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. விரைவில் அவரை நேரில் சந்திப்பேன். நான் இதுவரை எப்படி அவருடன் இருந்தேனோ அப்படித்தான் இனியும் இருப்பேன், அவருடன் தான் என் வாழ்க்கை. என் மாமனாரிடம் பேசினேன், அவர் என்னிடம் நல்ல முறையில்தான் பேசினார். விரைவில் அனைத்தும் சரியாகி விடும்.இவ்வாறு கூறினார் ஷமி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory