» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

முத்தரப்பு டி20 தொடர்: இந்திய அணிக்கு முதல் வெற்றி

வெள்ளி 9, மார்ச் 2018 8:37:33 AM (IST)



இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்தியா, இலங்கை, வங்கதேசம் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், 2வது ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்தியா எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 34, சப்பீர் அகமது 30 ரன்கள் சேர்த்தனர். இதர வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இந்திய தரப்பில் ஜெயதேவ் உனாட்கட் 3 விக்கெட்டுகளும், விஜய் சங்கர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஷர்துல் தாக்கூர், சாஹல் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். இந்திய அணி வீரர்கள் அதிக பட்சமாக தவன் 55, ரெய்னா 28, பாண்டே 27 சர்மா 17, என ரன்களை எடுத்தனர். இதற்குமுன் இலங்கையுடன் நடைபெற்ற போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. எனவே இந்த வெற்றியின் மூலம் இந்தியா, இலங்கை, வங்கதேசம் முத்தரப்பு போட்டியில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory