» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பாண்டியாவுடனான ஒப்பிடு வேண்டாம்: விஜய் சங்கர்

வெள்ளி 9, மார்ச் 2018 12:51:49 PM (IST)வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய அணியின் ஆல்ரவுண்டரான  விஜய் சங்கர், தன்னை பாண்டியாவுடன் ஒப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார். 

நிடாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இத்தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் வீழ்ந்திருந்த இந்தியா, தற்போது 2-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளது. கொழும்பில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து வென்றது. 2 விக்கெட்டுகள் எடுத்த தமிழகத்தின் விஜய் சங்கர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இதன்பிறகு விஜய் சங்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மிகவும் கடுமையாக உழைக்கிறேன். அதற்கான பலன் கிடைத்துள்ளது. அடுத்த ஆட்டத்திலும் திறமையை வெளிப்படுத்த ஆவலாக உள்ளேன். என் பந்துவீச்சில் சில கேட்சுகள் நழுவவிடப்பட்டன. இதனால் நான் கவலைப்படவில்லை. ஆட்டத்தின் ஒரு பகுதிதான் இதுவும். விளக்கொளியில் வெள்ளைப் பந்தைக் கேட்ச் பிடிக்க முயல்வது எளிதல்ல. அதேபோல வைட், நோ பந்துகளை வீசியதும் ஆட்டத்தின் ஒரு பகுதிதான். வைட் யார்க்கரை வீச முயற்சி செய்கிறபோது இதுபோல நடந்துவிடும். ஒரு பந்துவீச்சாளராக இதுபோன்ற கூடுதல் முயற்சிகள் அவசியம்.

பாண்டியாவுடன் என்னை ஒப்பிடுவது குறித்து கேட்கிறீர்கள். எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் ஒப்பீடுகளை விரும்பமாட்டார். நம்மிடம் உள்ள திறமையைப் பயன்படுத்துவதுதான் முக்கியம். ஒப்பீடுகளால் நாம் அழுத்தத்துக்கு ஆளாகக் கூடாது. என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory