» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தென் ஆப்பிரிக்க வேகப்புயல் ரபாடாவுக்கு ஐசிசி தடை!

செவ்வாய் 13, மார்ச் 2018 12:42:29 PM (IST)தென் ஆப்பிரிக்க வேகப்புயல் ரபாடா அடுத்த 2 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-1 என்று தொடரில் சமநிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் அற்புதமாகப் பந்துவீசி அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய வேகபந்துவீச்சாளர் காகிஸோ ரபாடா (வயது 22) , 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில், காகிஸோ ரபாடா அடுத்த 2 போட்டிகளில் விளையாட தடை விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. 

முதல் இன்னிங்ஸில் ஸ்மித்தை வீழ்த்திய ரபாடா, அடுத்தக் கணம் அவருடைய தோள்பட்டையில் இடித்தபடி ஓடினார். இதையடுத்து ஆட்ட நடுவர்கள் தர்மசேனா மற்றும் கஃபானே ஆகியோர் அவர் மீது ஐசிசி போட்டி நடுவரிடம் புகார் அளித்தார்கள். இதையடுத்து ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்ஸில் வார்னரின் விக்கெட்டை வீழ்த்திய ரபாடா அவர் அருகில் வந்து ஆக்ரோஷமாகக் கத்தினார். ஐசிசி விதிமுறைகளின்படி ஒரு பந்துவீச்சாளர் இதுபோன்ற செண்ட்ஆஃப் வழங்கக்கூடாது. இதனால் ரபாடா மீது நடுவர்கள் மீண்டும் புகார் அளித்துள்ளார்கள். 

ஒரு ஆட்டத்தில் இருமுறையும் புகார் அளிக்கப்பட்டதால் ரபாடா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ், தகாத வார்த்தைகளை பயன்படுத்தியது உள்ளிட்ட காரணத்தால் அவருக்கு போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  இந்த நடவடிக்கைகளை போட்டி நடுவர் ஜெஃப் குரோவ் மேற்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory