» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இங்கிலாந்து தொடர் : இந்திய அணியில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு

புதன் 9, மே 2018 10:31:57 AM (IST)

இங்கிலாந்தில் நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணி வலுவாக அமைந்துள்ளது, இதில் அஸ்வின், ஜடேஜா மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை. புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபில் தொடரில் ஆரஞ்சு தொப்பிக்குச் சொந்தக்காரரான அதிக ரன் குவிப்புப் பட்டியலில் முதலிடம் வகிக்கும் அம்பாத்தி ராயுடுவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் பார்மைக் கொண்டு ஷ்ரேயஸ் அய்யருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்படவில்லை. வங்கதேசத்துக்கு எதிராக அந்த வெற்றியைப் பெற்றுத் தந்த தினேஷ் கார்த்திக் டி20 அணியில்தேர்வு செய்யப்பட்டுள்ளார். தோனி விக்கெட் கீப்பர். ரிஸ்ட் ஸ்பின்னர்களான சாஹல், குல்தீப் தக்கவைக்கப்பட்டுள்ளனர். அதே போல் கே.எல்.ராகுலும் தன் ஐபிஎல் பார்ம் மூலம் மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பியுள்ளார்.

3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி வருமாறு:விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவன், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ராயுடு, தோனி, சாஹல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ்.

அயர்லாந்து, இங்கிலாந்து தொடருக்கான டி20 அணி வருமாறு: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, தோனி, தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory