» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட்: பிளே ஆஃப் சுற்று நேரத்தில் மாற்றம்

புதன் 9, மே 2018 4:39:51 PM (IST)

ரசிகர்களின் நலனுக்காக ஐபிஎல் 2018 பிளே ஆப் சுற்றுகளின் நேரம் 1 மணி நேரம் முன்னதாகவே தொடங்குகிறது.

ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா, கூறும்போது, பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் மாலை 7.00 மணிக்குத் தொடங்கும், 8 மணி போட்டிகள் முடிவடைய கிட்டத்தட்ட நள்ளிரவு 12 மணி வரை ஆவதால் தொலைக்காட்சி நேயர்கள், மைதானப் பார்வையாளர்கள் ஆகியோரின் மறுநாள் காலை பணிகளைக் கருத்தில் கொண்டு 7 மணிக்கு மாற்றம் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

7 மணிக்கு தொடங்குவதால் ஒரு மணி நேரம் முன்னதாக போட்டிகள் முடிவடையும் இது ரசிகர்களின் பல்வேறு கஷ்டங்களுக்கு தீர்வளிக்கும் என்று ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.ராஜீவ் சுக்லா நியூஸ்18 சானலில் கூறியதாவது: ஐபிஎல் கிரிக்கெட் என்பது அதுவாக இருப்பதற்குக் காரணமே ரசிகர்கள்தான். மைதானத்திலும் வீட்டில் தொலைக்காட்சி முன்பும் ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை கண்டு களித்து வருகின்றனர். 

ஆகவே ரசிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பிளே ஆஃப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி இரவு 7 மணிக்குத் தொடங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஸ்டேடியத்துக்கு வரும் பார்வையாளர்கள் மட்டுமல்ல, வீட்டில் தொலைக்காட்சியில் பார்க்கும் அலுவலகம் செல்வோர், மாணவர்கள் ஆகியோர் காலையில் எழுந்து பணிகளைக் கவனிக்க வேண்டியுள்ளது. ஆகவே போட்டிகள் ஒரு மணி நேரம் முன்னதாகத் தொடங்கினால் அவர்களுக்கு நல்லது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory