» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஹைதராபாத் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ரிஷப் பந்த்!

வெள்ளி 11, மே 2018 12:28:08 PM (IST)டெல்லிக்கு எதிரான அதிரடியாக ஆடிய ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.

டெல்லி டேர் டெவில்ஸ் மற்றும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு இடையிலான ஐபிஎல் 42-வது ஆட்டம் நேற்று இரவு புதுதில்லியில் நடைபெற்றது. முன்னதாக டாஸ் வென்ற தில்லி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 187 ரன்களை எடுத்தது. ஹைதராபாத் தரப்பில் ஷகிப் 2 விக்கெட்டையும், புவனேஸ்வர் குமார் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்திய பந்த், 7 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 128 ரன்களைக் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 187 ரன்களை எடுத்தது. ஹைதராபாத் தரப்பில் ஷகிப் 2 விக்கெட்டையும், புவனேஸ்வர் குமார் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி சார்பில் அலெக்ஸ் ஹேல்ஸ், ஷிகர் தவன் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 14 ரன்கள் எடுத்த ஹேல்ஸ், ஹர்ஷல் பட்டேல் பந்தில் போல்டானார்.பின்னர் தவன்-கேப்டன் கேன் வில்லியம்ஸன் ஆகியோர் இணைந்து தில்லியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். 

ஷிகர் தவன் 4 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 50 பந்துகளில் 92 ரன்களையும், கேன் வில்லியம்ஸன் 2 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 53 பந்துகளில் 80 ரன்களையும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 18.5 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து ஹைதராபாத் அணி 188 ரன்களை எடுத்து வென்றது. டெல்லி தரப்பில் ஹர்ஷல் பட்டேல் மட்டும் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory