» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கொல்கத்தா அணியால் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற முடியாது: கங்குலி கணிப்பு

வெள்ளி 11, மே 2018 4:01:59 PM (IST)

ஐபிஎல் தொடரில், கொல்கத்தா அணியால் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற முடியாது என கங்குலி கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 102 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.  மும்பை வீரர் இஷான் கிஷண் ஆட்டநாயகன் ஆனார் கடந்த 11 சீசன்களில் இரு அணிகளும் மொத்தம் 22 ஆட்டங்கள் விளையாடியதில் 18 ஆட்டங்களில் மும்பையே வென்றுள்ளது. புள்ளிகள் பட்டியலில் மும்பை அணி 10 புள்ளிகளுடன் 4-ம் இடத்திலும் கொல்கத்தா அணி அதே 10 புள்ளிகளுடன் 5-ம் இடத்திலும் உள்ளன. 

இந்நிலையில் கொல்கத்தா அணி குறித்து முன்னாள் வீரர் செளரவ் கங்குலி கூறியதாவது: மும்பை அணிக்கு எதிராக 102 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றபிறகு, கொல்கத்தா அணியால் இந்தமுறை பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற முடியாது என நினைக்கிறேன். ஆனால், அடுத்த வருடம் கொல்கத்தா அணி தகுதி பெறும் என நம்பலாம். கொல்கத்தா, மும்பை ஆகிய இரு அணிகளுக்கும் மூன்று ஆட்டங்கள் மீதமுள்ளன. இரு அணிகளும் நான்காவது இடத்துக்காகப் போட்டியிடும். கொல்கத்தாவை விட மும்பை அணிக்கு பேட்டிங்க் வரிசை வலுவாக உள்ளது என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory